ஜெனீவா பிரேணை - அமெரிக்கா வென்றது - இலங்கைக்காக பலமாக வாதாடியது கியூபா
ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் நேற்று வியாழக்கிழமை இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த பிரேணை தொடர்பான விவாதம் வாக்களிப்பு நடைபெற்றது. பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் கலந்துகொண்ட அதேவேளை 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (சுவிஸ் நேரம் காலை 10.30 மணிக்கு) இந்த பிரேணை மீதான விவாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் Laura Lasserre Dupuy தலைமையில் ஆரம்பமாகியது.
அமெரிக்க நாட்டு பிரதிநிதி முதலில் உரையாற்றினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையின் போது வலியுறுத்தினார். இதையடுத்து கியூபா நாட்டு பிரதிநிதி கருத்து வெளியிட்டார். அவர் இலங்கை குறித்த பிரேணை ஒத்திவைக்கப்பட வேண்டுமென வாதிட்டார்.
இதையடுத்து மீண்டும் அமெரிக்கா பிரதிநிதி கருத்து வெளியிட்டார். குறித்த பிரேணை ஒத்திவைக்கப்பட வேண்டியதன் அவசியம் கிடையாதென்பது அவருடைய வாதமாக இருந்தது. அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பதில் கூற மீண்டும் கியூபா நாட்டு பிரதிநிதிக்கு சந்தப்பம் கொடுக்கப்பட்டது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடான இலங்கையை இலக்குவைத்து கொண்டுவரப்படும் இதுபோன்ற பிரேணைகள் அவசியமற்றதென கியூபா நாட்டு பிரதிநிதி மீண்டும் வாதிட்டார்.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பெல்ஜியம் நாட்டு பிரதநிதி கருத்து வெளியிட்டார். அவர் இலங்கை குறித்த பிரேணையை ஆதரித்து பேசினார். இதையடுத்து செக் நாட்டு பிரதிநிதி உரையாற்றினார் அவர் பிரேணைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார். அடுத்து சீனா நாட்டு பிரதிநிதி கருத்து வெளியிட்டார். சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தப் பிரேணையை நிராகரிப்பதாக இதன்போது அவர் கூறினார்.
இதனையடுத்து இலங்கைக்கு கருத்து தெரிவிக்க 3 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது இலங்கை சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார். குறித்த பிரேணையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என வாதிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியாகி 3 மாதங்களே ஆகியுள்ளன. 3 வருடங்கள் செல்லவில்லை. அதனை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை. குறித்த பிரேணையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என வாதிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியாகி 3 மாதங்களே ஆகியுள்ளன. 3 வருடங்கள் செல்லவில்லை. அதனை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரையினையடுத்து மீண்டும் கியூபா நாட்டின் பிரதிநிதி உரையாற்றினார். அவர் தனதுரையில் இலங்கை தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்துப் பேசினார். அவரது உரைமுழுவதும் இலங்கையை காப்பாற்றுவதாக அமைந்திருந்தது.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.பங்களாதேஷ்
02.சீனா
03.கொங்கோ
04.கியூபா
05.ஈக்குவாடோர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலைத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிபைன்ஸ்
11.கட்டார்
12.ரஸ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-
01.அவுஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கெமரூன்
05.சிலி
06.கொஸ்டரீக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நோர்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்ஸர்லாந்து
23.ஐக்கிய அமெரிக்கா
24.உருகுவே
வாக்களிக்காத நாடுகள்:
01.அங்கோலா
02.போர்சுவானா
03.பேர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்தான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்
Post a Comment