சீனாவில் முஸ்லிம்கள் படுகொலை - பாகிஸ்தானில் சீனப் பெண்னை பழிதீர்த்த தலிபான்கள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த சந்தையொன்றில் சீனப்பெண் ஒருவரும், அவருடைய பாகிஸ்தான் தோழியும் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
சின்ஜியாங் பகுதியில் சீன பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, பதிலடியாக சீனப்பெண்ணை கொன்றதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் முகம்மது அப்ரிடி கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட சீனப்பெண் ஹுவா ஜியாங் (42) சீன அரசுப் பல்கலைகழக மாணவி ஆவார். ஜியாங் தனது விடுமுறையைக் கழிப்பதற்காக பாகிஸ்தான் வந்துள்ளார். ஜியாங்குக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துவந்த பாகிஸ்தான் பெண் ஷாம்ஸ்சும் ஜியாங்குடன் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்கனவே கடந்த 2007-ல் சீனாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
Post a Comment