Header Ads



யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன கூட்டம்

அனைவருக்கும் ஸலாம்

இத்தாள் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் சார்பாக கடந்த செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஏப்ரல் முதலாம் திகதி சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம் நடைபெறும்.

அத்துடன் அடுத்த தவணைக்கான தலைவர் உபதலைவர் தெரிவும் நடைபெறும், என்பதாகும், எனது பெயருக்கு இழுக்கை ஏற்படுத்த நாடும் ஒரு சிலர் மேற்படி கூட்டம் நடைபெறாது என்று கூறிவருவதுடன் அதற்கான காரணமாக நான் நாட்டில் இல்லை என்றும் சொல்லிவருகின்றார்கள், இவர்கள் சொல்லிவரும் இச்செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும், குறிப்பிட்ட அமைப்பில் கூட்டம் நடைபெறும் என்றும் நான் பொதுவாக மக்களுக்கும் சம்மேளன அங்கத்தவ்ர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அவ்வாறு செய்திகளைப்பரப்புவோர்க்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதையும் இத்தாள் சகலருக்கும் அறியத்தருகின்றேன், சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம் சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
எம்.ஏ.சீ.எஸ்.ஏ.முபீன்
இலக்கம் 100, முஸ்லிம் கல்லூரி வீதி யாழ்ப்பாணம்
தலைவர், யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

11 comments:

  1. ஏப்ரல் முதலாம் திகதி?

    யார் யார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்?
    அங்கத்தவர்கள் மட்டுமா?

    அடுத்த தலைவராக மீண்டும் ஜனாப் முபீன் அவர்களே
    தெரிவு செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. பொருத்தமில்லாதவர்கள் கைக்கு தலைமைத்துவம் சென்று விடக் கூடாது.

    ''புதிய தலைமை, புதிய தலைமுறை'' என்ற போலிக் கோஷங்களுடன்
    தங்கள் பங்குக்கு சொனகதேருவை ஒரு கை பார்க்க சிலர்
    தயாராக இருக்கின்றனர்.

    தேவையில்லாமல் இவர்களை தலைவர் ஆக்கி, இவர்களை பெரிய
    ஆட்கள் ஆக்கிவிட வேண்டாம். பின்னர் நாம்தான் கைசேதப்பட வேண்டி வரும்.

    மூத்தவர்களிலேயே சிறந்தவர்களை தெரிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  3. யாழ் முஸ்லிம் இணையத்தளம் தட்போது துரோகிகளின் இணையமாக செயட்படுகிறதா? செயலாளர் தானே கூட்டத்துக்கான அழைப்பை விட முடியும் என்ற நியதியை யாழ் முஸ்லிம் இணையத்தளம் அறியவில்லை போலும். முக்கியமான உறுப்பினர்களை தொடர்பு கொண்ட பின்னர் செய்தியை வெளியிட்டிருக்கலாம்.
    இந்தக்காலத்தில் கேட்டவர்கள் தகுதியட்டரவர்கள் தான் தலைவர்களாக வருவார்கள். அவர்கள் பேச்சைத் தான் எல்லோரும் கேட்பார்கள். இது எமது நபி சொன்ன விடயம். நல்லவர்கள் ஒதுக்கப் படுவார்கள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. We could not find a leader like Brother Mubeen..We all should try to make him a better Islaamic Leader..We believe he is better than Canning Fox..

    ReplyDelete
  5. இது உண்மையில் யாழ்ப்பாண சோனகர் சமூகத்தை மடையர்களாக எண்ணும் மனோநிலை தொடர்ந்தும் இருக்கின்றது என்பதைக்காட்டப் போதுமானதாகும், யார் தலைவர் என்பதை சபைதான் முடிவு செய்ய வேண்டும், சம்மேளனத்திற்கென ஒரு யாப்பும் ஒழுங்குவிதிகளும் இருக்கின்றன, எனவே அவற்றின்படி அது நடக்கட்டும், ஆனால் சகோ. முபீன் அவர்கள் நாட்டில் இல்லாத படியால் கூட்டத்தை ஒத்திவைக்கவும் என்ற கோரிக்கையுடன் கையெழுத்துவேட்டை இங்கே சோனகர் தெருவில் நடக்கின்றது, இங்கே உள்ள செய்தியின்படி பார்த்தால் அந்தக்கடிதத்துக்கும் முபீன் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று இருக்கின்றது, ஆனால் முபீன் அவர்களின் கீழ் பணிபுரியும் ஒருவரே அந்தக்கடிதத்துடன் சம்மேளன அங்கத்தவர்களை சந்தித்து கையெழுத்து கேட்கின்றார், இன்று காலையும் குறித்த கையெழுத்து வேட்டை நடக்கின்றது. இதன் உண்மை நிலைகள் என்ன என்பதை அறிய வேண்டும், இங்கே உலகிற்கு ஒரு முகமும் ஊருக்குள் இன்னொரு முகமும் காட்டும் முயற்சி நடப்பதாக எண்ணத்தோன்றுகின்றது? யாழ் முஸ்லிம் இணையத்தளம் உண்மை நிலையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete
  6. கூட்டம் இன்றைக்கே நடைபெறப்போவதில்லை.
    இன்னும் இரண்டு நாள் பாக்கி உள்ளது.
    தலைவர் முபீன் வரவே மாட்டார் என எப்படி தீர்மானிப்பது?

    சம்மேளனத்தை சார்ந்தவர்களிடம் இன்று காலையும் கையெழுத்து திரட்டப் பட்டால்,
    திரட்டுபவர்களின் பெயர், பதவி விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டியதுதானே?

    தகுதியில்லாதவர்கள் தங்கள் தங்கள் தலைவர் பதவி நப்பாசைக்காக சொனக்தேருவாரை தொடர்ந்தும் மடையர்கள் ஆக்க
    முயல வேண்டாம்.

    யாழ் முஸ்லிம் இணையத்தளம் பொறுப்புடனும், நிதானமாகவும் மட்டுமே செயல்பட முடியும்.
    அஞ்சா நெஞ்சன் அப்துல் காதார் என்ற ரொஷான் காதர் போல கோழைத்தனமாக
    செயல்பட முடியாது. தயவு செய்து அவ்வாறு எதிர்பார்க்கவும் வேண்டாம்.

    யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை வீணாக குறை சொல்ல வேண்டாம்,
    அது வெறுமனே வறட்டு சட்டங்களை பேசிக்கொண்டிருக்காமல் யாழ் சோனகர்
    நலன் கருதியே குறித்த கடிதத்தை பிரசுரித்துள்ளது என்பது என்பது யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை
    தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும்.

    செயலாளர் அழைப்புவிடுக்க வேண்டும், என்று வறட்டு வாதம் பேசும் நீங்கள், முஅத்தின் அதான் சொல்லாமல்
    பேஷ் இமாம் அதான் சொல்லிவிட்டால் ஜும்மாவுக்கு போக மாட்டீர்களா?

    மேலும் யாழ் முஸ்லிம் இணையத்தளம் துரோகிகளின் தளமாக செயல்படுகின்றதா என கொஞ்சம் கூட மனச்சாட்ச்சி இல்லாமல் எப்படி அஞ்சா நெஞ்சன் என்ற கோழை போல
    உங்களால் கேட்க முடிகின்றது? உங்களின் அந்த கேள்வியையும் சேர்த்தே பிரசுரித்திருப்பது யாழ் முஸ்லிம் இணையத் தளத்தின் நேர்மையை காட்டுகின்றது.
    தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை, வெறுமனே நடுநிலையான நமக்கென இருக்கும் ஒரே ஒரு ஊடகத்தையும் சிதைத்துவிட முயல வேண்டாம்.
    எமக்கு மேர்வின் சில்வா சண்டித்தனங்கள் தேவையில்லை.

    யாழ் முஸ்லிம் இணையத் தளத்துக்கு பாராட்டுக்கள்.

    Abo Azzam

    ReplyDelete
  7. //இது உண்மையில் யாழ்ப்பான சோனகர் சமூகத்தை மடையர்களாக என்னும் மனோநிலை
    தொடர்ந்தும் இருக்கின்றது என்பதைக் காட்டப் போதுமானதாகும்//
    என்று அவலை நினைத்து உரலை
    இடித்து, சமூகத்தை மடையர்களாக என்னும் மனோநிலை தன்னிடம் தான் இருக்கின்றது என்பதை
    சொல்லாமல் சொல்லத் தடுமாறும் பெயரில்லா சகோதரருக்கு,

    ஜனாதிபதியை தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும் என்றாலும், தேர்தலுக்கு முன்னரே, மக்கள்
    இவர்தான் பொருத்தமானவர், இவர் நல்லவர் என்று பேசுவதை சட்ட விரோதம் என்றா சொல்லப் போகின்றீர்கள்?
    இங்கே கருத்துச் சொன்னவர்கள் இருக்கின்ற நபர்களில் முபீனே சிறந்தவர் என்று கருதுவதால், தமது
    கருத்தை சொல்லியுள்ளார்கள். இந்த உரிமையும் சோனகதெருவாருக்கு இல்லை என்றா சொல்ல வருகின்றீர்கள்.


    உங்கள் தடுமாற்றத்தைப் பார்த்தால், நீங்களும் தலைவர் ஆக வர வேண்டும் என்ற நப்பாசையில் தடுமாறுவது போலல்லவா உள்ளது.

    சகோதரர் முபீன் தான் மிகச்சிறந்தவர் என்று யாரும் சொல்லவில்லை. அவருடைய நல்ல, கேட்ட பக்கங்களை மக்கள் அறியாமலும் இல்லை.
    ஆனால், மிக முக்கியமாக, இப்பொழுது தலைவர் பதவியை குறி வைத்து காய்
    நகர்த்திக்கொண்டிருக்கும் மற்ற பேர்வழிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், சகோதரர் முபீன் எவ்வளவோ மேல்
    என்பது புரியும். உங்களுக்கும் புரியும். மக்களுக்கும் புரியும்.

    ReplyDelete
  8. ஒழுங்காக வாசித்து ஒரு விடயத்தை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் எல்லாம்
    கருத்து சொல்ல புறப்பட்டால் சமூக ஆவலர்களுக்கும், துரோகிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போவது ஒன்றும்
    ஆச்சரியம் இல்லை.

    தமிழ் தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் தெரிந்தவர்களிடம் கேட்டு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
    சும்மா பொது இடத்தில் ஒளம்பித் தொலைக்கக் கூடாது.

    செயலாளர்தான் கூட்டத்துக்கான அழைப்பை விட முடியுமாம், இதை சொல்லத் தெரிந்த அளவுக்கு,
    தலைவர் கடிதத்தில் என்ன எழுதியுள்ளார் என்பதனை வாசித்து விளங்கத் தெரியவில்லை.

    செயற்குழுக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி கூட்டம் நடைபெறும் என்பதை உறுதிப் படுத்தி,
    அவர் நாட்டில் இல்லை என்று மேற்கொள்ளப் பட்ட பொய்ப் பிரச்சாரத்துக்கு மறுப்பு சொல்லியுள்ளார்.

    மற்றவர்களை குறை சொல்ல முன்னர், தங்கள் முகங்களை கனாடியில் ஒருதடவை நன்றாக
    பார்த்துக் கொள்வது சிறந்தது.

    ReplyDelete
  9. நமோ நமோ நமோ மாதாவிற்கு! உங்களது கருத்துக்கள் சிறப்பானவைதான் ஒத்துக்கொள்கின்றோம் ஆனால் முபீன் தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர் என்று சொல்கின்றீர்களே! அது எப்படி என்று சற்று விளக்கமாக சொல்ல முடியுமா???
    (யாழ் முஸ்லிம் இணையத்தளம் இந்த திறந்த விவாதத்திற்கு இடம்தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்)
    01- சோனகர் தெருவை விற்றுத்தின்ற சாதனைக்காகவா? அல்லது இன்னமும் சோனகனை மடமைத்தனத்தின் உச்சத்தில் வைத்திருப்பதாலா? இன்னமும் சோனகர் தெருவில் நடக்கும் அத்தனை சமூகவிரோத செயல்களுக்கும் துணைப்போவதாலா? அல்லது நடந்து முடிந்த மீலாத் நிகழ்வில் காட்டி சாகசங்களுக்காகவா? சொல்லுங்கல் தோழரே எதற்காக அவரை தலைவராக்க வேண்டும்

    ReplyDelete
  10. முபீன் பற்றி நான்?
    எனது முதல் பதிவின் கடைசி பந்தியை மீண்டும் இரண்டு தடவை வாசிக்கவும்.
    அதைத் தவிர சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.

    நீங்கள் பட்டியல் போட்டுள்ள விடயங்கள்,
    சட்ட நடவடிக்கை எடுக்கவும். இல்லாவிட்டால்
    உங்களுக்கும் 'அஞ்சா நெஞ்சன்' என்ற கோழை நெஞ்சன் ரொஷான் காதர்
    என்பவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  11. சும்மா தடுமாறியவர்களுக்கு இப்பொழுது பதில் கிடைத்திருக்கும்.
    குட்டை குழம்பும், மீன் பிடிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு
    ஏமாற்றம்தான் மிச்சம்.

    வேறு என்ன செய்ய, போய்க் கருவாட்டுடன் சோத்தைத் தின்ன வேண்டியதுதான்.

    http://www.jaffnamuslim.com/2012/04/blog-post.html

    ReplyDelete

Powered by Blogger.