Header Ads



காட்டிக்கொடுத்த அப்ரிடி மீது தேசத்துரோக குற்றச்சாட்டு - டிஸ்மிஸ் செய்யப்பட்டார்

அல் -குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனை காட்டி கொடுத்ததாக சந்தேகப்படும் டாக்டரை அந்நாட்டு அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. ஒசாமா பின்லாடன் கடந்தாண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஒசாமா பின்லாடன் எங்கு மறைந்திருக்கிறார் என்ற விவரம் முதலில் அமெரிக்காவுக்கு தெரியாது.

இதை தெரிந்து கொள்வதற்காக, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., பாகிஸ்தானிய டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவரை தேர்வு செய்தது. இவரது தலைமையில் போலியாக, தடுப்பூசி திட்டம் ஒன்றை துவக்கி, வீடு வீடாக சென்று ஒசாமா அல்லது அவரது குடும்பத்தினர் இருக்கிறார்களா என, நோட்டம் விடப்பட்டது. டாக்டர் ஷகீல், அபோதாபாத்தில் ஒசாமா மறைந்திருந்த வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மரபணு சோதனைக்கான ரத்தத்தை சேகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கைபர் பக்துன்கவா மாகாணத்தின் அரசு டாக்டராக இருந்த ஷகீல் மூலமாக தான் ஒசாமா, அபோதாபாத்தில் பதுங்கியிருந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து ஷகீல், அரசு டாக்டர் பணியிலிருந்து நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.இவரை போலவே சி.ஐ.ஏ.,வால் போலி தடுப்பூசி திட்டத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய பெண் டாக்டர், ஒருங்கிணைப்பாளர் ஒருவர் மற்றும் 17 செவிலியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.ஒசாமா பின்லாடன் வீட்டில் நடந்த, அமெரிக்க அதிரடி படை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில், டாக்டர் ஷகீலையும் சேர்க்க வேண்டும். இவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும், என விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.

No comments

Powered by Blogger.