Header Ads



நீரில் மூழ்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் பரிதாபமாக வபாத்தானார் - மகாவலி ஆற்றில் சோகம்

நீரில் மூழ்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் மனைவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள கும்புக் கந்துர என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

(04.07.2012) பி.ப. 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திகண பள்ளக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய மொஹமட் ரிஸ்வி என்ற கணவரும் 42 வயதுடைய சாஹீல் நிஸா என்ற மனைவியுமே. இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள்  பிற்பகல் மகாவலி ஆற்றில் குளிக்கச் சென்ற வேளை மனைவி முதலில் நீரில் மூழ்கினார். இதனை கண்ட கணவர் அவரை காப்பாற்ற முயன்ற போதே இருவரும் மூழ்கி உயிரிழந்தனர்

No comments

Powered by Blogger.