Header Ads



மாடுவெட்ட தடைவிதித்தார் யாழ் அரசாங்க அதிபர் - நீதி கேட்கிறார் முஸ்லிம் சகோதரர் மாட்டுக்கும் பொலிஸ் காவல்


யாழ்ப்பாணத்தில் காளை மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்விருந்த முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு அந்த மாட்டை வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த மாடும் பொலிஸ் காவலில் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கால்நடைப் பண்ணையில் ஏலத்தில் வாங்கிய காளை மாட்டை அதன் உரிமையாளரான முஸ்லிம் சகோதர இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்காக வெட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்.

அதேநேரம் நாவாந்துறை மாட்டிறைச்சிக் கடை உரிமையாளரான முஸ்லிம் சகோதரர் தான் பெறப்பட வேண்டிய அனைத்து அனுமதிகளையும் பெற்றே அதைக் மாட்டைவெட்டும் மடுவத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் அதன் போது மக்கள் வீதிகளில் நின்று பார்வையிட்டதோடு மடுவதற்திலும் பார்வையிட்டனர் என்றும் இதை விட வேறு விளம்பரம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த காளை மாட்டை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தமக்கு லட்சக் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து வட மாகாண ஆளுநர்இ ஜனாதிபதி ஆகியோருக்கு தெரியப்படுத்த உள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடவுள்ளதாகவும் அந்த முஸ்லிம் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. The Jaffna Kilinochchi muslim federation has to act fast on it and get relief for this muslim brother immediately.

    Muhajireen Colombo

    ReplyDelete
  2. இது விடயத்தில் அரசாங்க அதிபரின் குறித்த செயல்பாட்டின் நோக்கம் என்ன என்பதனை
    தெரிந்துகொள்ளவும், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பாளரின் கருத்தையும் பெற்று பிரசுரிக்கவும்
    இந்த ஊடகம் முன்வர வேண்டும்.

    ReplyDelete
  3. The Jaffna Kilinochchi Muslim Federation is good for nothing but
    organaising Meelad un Nabi.

    ReplyDelete
  4. இது மாடு வெட்டுற பிரச்சினை இல்லை.யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கும் முயட்சியகாவே தெரிகிறது.விழிப்புடன் இப் பிரச்சினையை கையாள்வது நல்லது.என்ன நடந்தாலும் குப்பார்களுக்கு காணிகளை விற்காதீர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிக்காக கழுவுவதை விட்டு சமூகத்திற்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும்.

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=eBR7AEU1eQU&feature=player_embedded

    ReplyDelete

Powered by Blogger.