மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அதற்கு எதிராக போராடுவது கடமை
கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.
பேரணியில் கலந்து கொண்ட 40 குழுக்களில் ஒன்றான மதங்களுக்கிடையான புரிந்துணர்வு குழுவின் தலைவர் மார்க் லூகென்ஸ் "எச்சமூகத்தை சார்ந்த எந்த ஒரு தனி நபரும் அவர் சார்ந்த மதத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவது எங்கள் மீது கடமையாக உள்ளது" என்று கூறினார்.
"மதத்தின் பெயரால் அநீதி இழைக்கப்படும் போது அம்மதத்தை சேர்ந்தவர்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதனால் தான் இப்பேரணியில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்" என்று ப்ரொகரஸிவ் இந்துக்களின் கூட்டமைப்பின் தலைவரான சுனிதா விசுவநாத் கூறினார்.
2005ம் ஆண்டு இதே குழுக்களின் முயற்சியினாலேயே நரேந்திர மோடிக்கு அமெரிக்காவுக்கு வருகை தர விசா மறுக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விரைவாக கிடைக்க குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
Post a Comment