பலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு - ஜெனீவாவில் தீர்மானம் - அமெரிக்கா மூக்குடைப்பட்டது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பலஸ்தீனர்களின் உரிமைகள் மீதான பிரேரணை தொடர்பாக ஆராய எடுக்கப்பட்ட போது, சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அமெரிக்க தனியாக நின்று ஒதுங்கிக் கொண்டது.
இதே தினத்தன்று தான் இலங்கை மீதான பிரேரணையும் ஆராயப்பட்டது.சுய நிர்ணயத்துக்கான உரிமைகளுக்கான பாலஸ்தீன உரிமைகளை ஆதரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களுள் 46 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை, நீதி, கெளரவம், இறைமை, சுதந்திரம், ஜனநாயகம், ஸ்தாபிதம் தொடர்பான இப்பிரேரணை மீள் உறுதி செய்திருந்தது.
ஐ. நா. அமைப்பில் உள்ள சகல உறுப்பு நாடுகளையும், சம்பந்தப்பட்ட அமைப்புக்களையும் இந்த விடயத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் ஆதரிக்க வேண்டுமென்றும் இப்பிரேரணையில் கோரப்பட்டிருந்தது.
அமெரிக்கா மனித உரிமைகள் விடயத்தில் அதன் இரட்டை வேடத்தை வெளிக்காட்டி யது. கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் இத்த கைய ஒரு பிரேரணைக்கு ஒத்த பிரேரணை யில் 166 வாக்குகளை அளித்தது. அமெரிக்கா, கனடா உட்பட 05 நாடுகள் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
Post a Comment