Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகளிர்தின வாழ்த்துச் செய்தி

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் மூலம் நடாத்தப்படுகின்ற 2012 சர்வதேச மகளிர் தின விழாவுக்காக செய்தியொன்றை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறு ஜனாதிபதி விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை சமூகத்தில் மிகச் சிறந்த இடத்தை உரித்தாக்கிக் கொண்டிருக்கின்ற பெண் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக மிகச் சிறந்த முறையில் சேவையாற்றுகின்றாள். இன்று அவள் ஆடைத்துறையின் மூலம் தனித்துவமான ஒரு பங்களிப்பை வழங்குகின்றாள்.

அத்துடன், சட்டத்துறையிலும் மனிதவளத்துறையிலும் தன்னை அர்ப்பணித்து பாரிய சேவைகளை ஆற்றுகின்றாள். இலக்கியம், மருத்துவம், கற்பித்தல், தாதிசேவை போன்ற அனைத்து துறைகளிலும் தனித்துவமான ஓர் இடத்தை பெண் பெற்றுக்கொண்டுள்ளாள்.

எமது சமூக கட்டடத்தின் உறுதியான அத்திவாரம் குடும்பமாகும். அதில் முதன்மையான இடம் சந்தேகமற எமது பெண்ணுக்கே உரித்தாகின்றது. தாய்க்குரிய கெளரவத்தையும் பெருமையையும் பாதுக்காப்பது இந்த நாட்டின் பொறுப்பாகும். பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மக்கள் சமூகத்தின் கட்டாய கடமையாகும். பெண் பிள்ளையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய மகளிர் தின கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவையாக அமையும். பெண் பிள்ளையை பாதுகாப்பது என்பது முழு சமூகத்தையும் பாதுகாப்பதாகும் என நான் நம்புகிறேன். அதற்காக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவிக்க விரும்புகின்றேன்.

சர்வதேச மகளிர்தின விழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜனாதிபதி விடுத்துள்ள பெண்கள் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.