ஈரான் தேர்தல் நீதியாக நடைபெறவில்லை - பிரிட்டன் குற்றம் சுமத்துகிறது
ஈரானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் இடம்பெறவில்லை என பிரித்தானிய குற்றஞ்சாட்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இருந்து எதிர்த்தரப்பினரின் குரல்கள் முடக்கப்பட்ட சூழலில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது பிரதிநிதிகளை சுயாதீனமாக தெரிவுசெய்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு மாறாக, ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையை சோதனை செய்யும் ஒரு தேர்தலாகவே இது அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தேர்தல் மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பாக அமையாது என நம்புவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தேர்தலில் வாக்களிப்பிற்காக நிர்ணயிககப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக ஐந்து மணித்தியாலங்கள் வாக்களித்த மேலதிக வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தேர்தலில் வாக்களிப்பிற்காக நிர்ணயிககப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக ஐந்து மணித்தியாலங்கள் வாக்களித்த மேலதிக வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment