நுவரெலியாவில் பள்ளிவாசலை திறக்கிறார் மஹிந்த ராஜபக்ஸ
நுவரெலியா ஹில் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசல் எதிர்வரும் 11ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பேருவளை சீனன் கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற மர்ஹும் எம்.எஸ்.எம். பளீல் ஹாஜியார், அவரது மனைவி மர்ஹுமா ஸித்தி பரீதா ஆகியோரின் நினைவாக அன்னாரின் புதல்வர்களின் நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி பள்ளிவாசல் திறப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அஷ்ஷெய்க் ரிஸ்வி (முப்தி) விசேட பேச்சாளராகவும் கலந்து கொள்வார்.
Post a Comment