Header Ads



அல்குஆன் கட்டளைப்படி மகளை வழிநடத்துவதால் நீச்சலுக்கு அனுப்ப தடைவிதித்த பெற்றோர்களுக்கு அபராதம் - சுவிஸில் சம்பவம்

நீச்சல் பயிற்சிக்கு மகளை அனுப்ப மறுத்த முஸ்லீம் தம்பதிகளுக்கு சுவிஸில் 1400 சுவிஸ் பிறாங் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.  சுவிஸ் பாசல் நகரில்  வாழ்ந்து வரும்  இஸ்லாத்தை பின்பற்றும்  பெற்றோர்  தங்களது மகளை  ஆண் பெண்  இருபாலருக்கும்  பொதுவாக  அளிக்கப்பட்ட  நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப  மறுத்ததால்  1400 சுவிஸ் பிறாங்க  தண்டப்பணம்  செலுத்த  வேண்டும்  என நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தங்கள் மகளை  குரானின் கட்டளைப்படி வழிநடத்துவதால் நீந்தல் பயிற்சிக்கு அனுப்ப முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.

ஆனால் நீதிமன்றமோ  இந்த வாதத்தை  நிராகரித்ததுடன்  நீச்சல் பயிற்சியானது அவர்களின் மத நம்பிகையுடன்  தொடர்புடைய விடயம் அல்ல என்றும்  பொதுவாழ்வில் பாதுகாப்புடன் தொடர்புடையது என தெரிவித்து தண்டப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டதுடன் மகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.