Header Ads



பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கக்கும் சர்கோசி

பிரான்ஸில் அதிகளவான வெளிநாட்டவர் இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் சர்கோசி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தாம் மீண்டும் ஜனாதிப தியாக தேர்வாகும் பட்சத்தில் வெளிநாட்டவர்களை பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் உறுதி அளித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள சர்கோசி தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றபோதே இதனைத் தெரிவித்தார். குடியேற்றவாசிக ளுக்கு வரப்பிரசாதமாக பிரான்ஸ் இருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்தி கடுமையான தேர்வு விதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார். ஹங்கெரியாவில் இருந்து குடியேறிய தந்தைக்கு பிறந்த சர்க்கோசி குடியேற்ற விவகாரம்இ இனவாத கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்பிவருகிறார். பிரான்ஸில் பல இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதும், அண்மையில் துருக்கி நாட்டை அவமானப்படுத்தும் சட்டமூலமொன்று தோல்வியடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.