Header Ads



யாழ். சின்னப்பள்ளி - யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியவர்களா ஆளவேண்டும்..?

முஹம்மத் சிராஜ்

யாழ் சின்னப்பள்ளிவாசலை கட்டிட மீளமைப்புக் குழு கட்ட முனைந்த போது யாழ்ப்பாணத்திலிருந்த சிலரால் அது தடுக்கப்பட்டது. இதன் உள்நோக்கம் என்னவென்று அப்போது அறியமுடியாதிருந்த போதும் தற்போது அது வெளிவந்துள்ளது. அப்பள்ளியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் ஸலபிகள் முயன்றுள்ளனர். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்ட அல்லாஹ்வின் வீடுகள். அதனை எந்த ஒரு தனி இயக்கமும் தனது சொத்தாக்க முயற்சி செய்வது தகுமா? மேலும் அந்தப்பள்ளியை தமது காணியில் மஹல்லாவாசிகளிடமிருந்து திரட்டிய பணத்தில் கட்டிய பள்ளியை  அந்த மஹல்லாவாசிகளின் விருப்பமின்றி அடாத்தாக பிடித்துக் கொள்ள முயலவது மிகவும் தவறானதாகும்.
பள்ளிவாசல் கட்டுவதை ஒரு சிறு குழு தடுத்ததையறிந்த வக்புசபை மீள்கட்டுமான குழுவினரை அழைத்து அவர்களையும் நிர்வாகசபையின் உறுப்பினர்களாகும் படி வலியுறுத்தி நியமனக்கடிதங்களையும் வழங்கியது.

நிர்வாகசபையின் செயலாளர் எம்.ஏ.சி. சனூன் (நாவலர் வீதி), பிரதித் தலைவர்  எம்.ஐ.ஜாபிர் (முஸ்லிம் கல்லூரி வீதி), உதவிச் செயலாளர் எம்.ஐ.எம்.ஜமாலிக் (முஸ்லிம் கல்லூரி வீதி), உதவிப் பொருளாளர் எம்.ரி.எம்.நவாஸ் (முஸ்லிம் கல்லூரி வீதி), மீள்குடியேற்ற ஆலோசகர் எம்.நாஸர் (ஜின்னாவீதி), கமிட்டி உறுப்பினர்களான ஏ.சி.ஜலீல் (முஸ்லிம் கல்லூரி வீதி), ஹாமீம் சுவைஸ் (முஸ்லிம் கல்லூரி வீதி), எம்.எம்.எம்.றியாஸ் (கலீமா வீதி ), ஏ.ஜி. நஸீர்  போன்றவர்கள் யாழ்ப்பாணத்திலேயே வசிக்கின்றனர்.

எம்.எஸ். ஜினூஸ் ஏற்கனவே யாழ்ப்பாணத்துக்கு மாற்றால் கேட்டு மிகவிரைவில் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றார். அவரை தலைவராக யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள உறுப்பினர்களே தெரிவு செய்தனர்.

மீள்குடியேற்ற ஆலோசகர். அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜான்ஸின் (நீர்கொழும்பு), தனாதிகாரி அல்ஹாஜ் ரி.எம்.இப்திகார் (கொழும்பு), கமிட்டி உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எம்.முஸாதிக் (நீர்கொழும்பு) , எம். சுல்தான் முஹம்மத் மாலிக் (கொழும்பு) ஆகியொரே யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள உறுப்பினர்களாவர். இவர்களில் ஜான்ஸின் குடும்பத்தினர் (ரி.எம்.ஜப்ரின், எஸ்.ஏ.சி.ஏம்.பாயிஸ் உள்ளடங்கலாக ) 125000 ரூபாய்களை வழங்கியுள்ளனர். மாலிக் ஜினூஸ் குடும்பம் 75000 ரூபாய்களை வழங்கியுள்ளனர். இப்திகார் அவர்களும் பெரும் தொகையொன்றை வழங்கியுள்ளார்கள்.

இன்று வெளிநாடுகளில் உள்ள பலர் தமது மனைவி மாரைப் பிரிந்து பல ஆண்டுகள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு நிர்வகித்து வருகின்றனர். சிலர் தமது பெற்றோரை நிர்வகித்து வருகின்றனர். ஒட்டகக் காலம் என்று ஒன்று  இருந்தது அக்காலத்தில் பக்கத்து தெருவில் இருந்து கொண்டு கூட நிர்வகிக்க முடியாமல் இருந்தது. இன்று தொடர்பாடல்கள் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்து ஒரு நொடிப் பொழுதில் உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ளக் கூடியதாகவுள்ளது.

ஏற்கனவே பள்ளிவாசல் கட்டுமானப் பணி யாழ்ப்பாணத்துக்கு அப்பாலிருந்து சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. அறைகள் மலசல கூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்கான தூண் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கட்டிடங்கள் கட்டப்படுவதைப் பார்த்த பின்னரும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்து கொண்டு நிர்வகிக்க முடியாது என்று பொய்யுறைப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து ஆகும்.

யாழ்ப்பாணத்துக்கு வெளியே வசிப்பவர்களால் பள்ளி கட்டப்படுகிறது. அதுவும் நிர்வாகம் தான். அதைக் கட்டிட முகாமைத்துவம் என்று சொல்வார்கள். ஆனால் பள்ளியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்று தோற்றுப் போன சிலரின் அநாகரீகமான கருத்துக்களை ஏற்று ஒருசாரார் கருத்து வெளியிடுவது வருத்தத்துக்குரிய விடயமாகவுள்ளது.

இந்தக்குழுவின் தலைவர் ஜினூஸ் அவர்கள் அங்கம் வகிக்கும் செடோ அமைப்பு 2002 ஆம் ஆண்டில் ஒஸ்மானியா முபாரக் மௌலவியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட போது பள்ளிக்கூடத்துக்கு தேவையான பணவுதவிகளை பல வருடங்கள் செய்து வந்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்து நிர்வாகத்தை செய்யவில்லையா?

எம்.எஸ்.எம்.ஜான்ஸின் அவர்கள் யாழ் முஸ்லிம் இனையத் தளத்தில் தொடர்ச்சியாக மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதிவருகின்றார். அவ்வாறானவர்களை யாழ்ப்பாணதுக்கு வரவேண்டாம் என்று கூறுவது சரியா?

குர்ஆன் ஹதீஸீக்கு முரன்படாத வகையில் சிந்தியுங்கள். ஒரு இயக்கத்தை மையப்படுத்தி அந்த இயக்கத்துக்கு எதிரியாக கருதப்படுபவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் தவறாக நோக்கினால் குர்ஆனும் ஹதீஸும் அங்கு நிராகரிக்கப்பட்டுவிடும்.  ஒருவர் தனது கண்பகுதி உடைந்து  கண்கள் வெளியே தொங்கும் நிலையில் வந்து இன்னார் தன்னைத் தாக்கிவிட்டார் என்று கூறினாலும் தீர விசாரிக்காத வரை அதை நம்ப வேண்டாம் என சுன்னா நமக்கு கற்றுத் தருகிறது.

4 comments:

  1. very funny .

    ReplyDelete
  2. this is not a funny 1987 they did same thablic jamath or jamaat e islami each other fight for nothing. please dont forget past

    ReplyDelete
  3. Dear Writer,
    Please understand Islaam and Reality...A group call Thableeq Jama has occupied all the Masjids in Jaffna..Please try to stop it to create a unified Muslim Ummmah..

    ReplyDelete
  4. கட்டுரையை எழுதிய சகோதரரே,

    இயக்கங்களை ஒரு பக்கம் வையுங்கள்,
    நீங்களே சொல்கின்ற படி முழுமையாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்
    பள்ளியின் அனைத்து செயல்பாடுகளும் நடக்கட்டுமே, யார் இதனை தடுப்பது என்பதனை
    சிந்தித்தீர்களா?

    இதே இணையத் தளத்தில் தனது பேட்டியில் ஜினூஸ் என்ன சொல்லியுள்ளார் என்பதனை
    கவனித்தீர்களா?
    1774 இல் திக்ரு மஜ்லிஸ், ராத்திபு, துஆ மஜ்லிஸ் என்பன நடைபெற்றன, அவை மீண்டும் வேண்டும் என்கின்றாரே?
    இப்பொழுது சொல்லுங்கள், குர்ஆன் ஹதீசுடன் முரண்படுவது யார் என்று?

    அனாச்சாரத்துக்கு அழைப்பு விடுப்பது யார் என்று சிந்தியுங்கள்.

    அக்ரம்

    ReplyDelete

Powered by Blogger.