Header Ads



எமிரேட்சில் முதன்முறையாக ஒட்டகப்பாலில் ஐஸ்கிறீம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி நிறுவனம் ஒட்டகப் பாலில் இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது.

"இப்போது சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ் கிரீம்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்' என்று அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.

இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. நாங்க மட்டும் என்னவாம்?
    துபாய் காரனுக்கு முடியுமுன்னா, எங்களுக்கும்தான்...

    ஸ்ரீ லங்காவில் யானை பாலில் ஐஸ் க்ரீம்
    தயாரிக்கப் போறோம்.

    இப்பொழுதே நாடுங்கள் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் க்ரீம்.

    ReplyDelete

Powered by Blogger.