Header Ads



பரீட்சையில் குறைந்த புள்ளிகள் - வாழ்க்கையின் கஷ்டத்தை மகள் உணர வேண்டுமெனப்தற்காக மகளை பிச்சையெடுக்கவைத்த தந்தை

மைசூரில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய மகளுக்கு தண்டனையாக அவரை ஒரு கோயிலின் முன் அவரது தந்தை பிச்சையெடுக்க வைத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீசார் அந்த சிறுமியின் தந்தையை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் கூறுகையில், அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்டத்தை மகள் உணரமுடியும் என்பதால் இதைச் செய்தேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு தொண்டு நிறுவனம் அளித்த புகாரின்பேரில் அந்த சிறுமியின் தந்தை மீது சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். அந்த சிறுமி குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.