கொழும்பில் வளி மாசடைதல் குறைந்துள்ளதாம்
கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்ட வளி ஆய்வுப் பிரிவின் தரவுகளுக்கமைய, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக சுற்றாடல் அமைச்சின், வளி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பிலான பணிப்பாளர் அனுர ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் வளிமண்டலத்தில் காணப்படும் 10 மைக்ரோமீற்றருக்கும் குறைவான துணிக்கைகள் 62 வரையில் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரில் வளியின் தரத்தினை கண்டறிவதற்கு சில புதிய பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கூறினார். இதனூடாக நகரிலுள்ள வளியின் நிலைமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்றிட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment