Header Ads



எல்லாப் புகழும் இந்தியாவுக்கே என்பது தவறானது - பசீர் சேகுதாவூத்

தெற்காசிய அரசியல் சூழ்நிலையைக்கருத்திற் கொண்டு அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து மேற்கொண்ட காய் நகர்த்தல்களின் காரணமாகவே இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தது என முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டு அழுத்தம் மிகப்பெரும் காரணியாக அமையவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் தெற்காசியாவின் புதிய அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது. இதன் ஒரு நிகழ்வாகவே இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தது.

தீவிரப் போக்கு கருத்துக்களை வெளியிட்டு வரும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக் ரணவக ஆகியோர் கூறுவதைப் பார்க்கும்போது ஜெனீவாவில் எல்லாப் புகழும் இந்தியாவுக்கே என்பது போல் உள்ளது. இலங்கை தொடர்பான இந்தியாவின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது இவர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. அத்தோடு இந்தியா இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் செயற்பட்டது. 1987ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அரசின் அனுமதியின்றி விமான மூலம் உணவுப் பொருட்களை போட்டது. இது இலங்கையின் இறைமையை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
இப்போது புதுவடிவில் இலங்கைக்கெதிரான ராஜதந்திர முயற்சிகளை இந்தியா கைக்கொண்டு வருகிறது.  இறைமை மிக்க அரசுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 1987ல் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் புதுவடிவம் பெற்று எதிர்காலத்திலும் வரலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக ரணவக ஆகியோர் இந்தியா மீது வெறுப்புணர்வினைக் கொட்டி வருகின்றனர்.

இது ஆபத்தான நிலைகளைக் கூட ஏற்படுத்தலாம். புலிகள் ஆயுதம் ஏந்தி
தமிழுக்காக போராடியது போல் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியன ஆயுதம் ஏந்தாது பௌத்தர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.  தமது அரசியல் ஸ்திரத்தன்மையை கருத்திற் கொண்டு விடுக்கப்படும் இவ்வாறான அறிக்கைகள் எமது
நாட்டுக்கு அச்சுறுத்தல்களை விளைவிக்கலாம

No comments

Powered by Blogger.