Header Ads



ஈரான் மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல், பிரதமர் கூறுகையில், ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான காலகட்டம் ஆண்டுக் கணக்கில் இல்லை, வார அல்லது நாள் கணக்கில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் ஈரானை விட்டு மிகத் தொலையில் உள்ளது. இஸ்ரேலோ ஈரா னுக்கு மிக அருகில் உள்ளது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இஸ்ரேலுக்கே மிக அதிகம். எனவே தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரான் முதன் முறையாக மேலை நாடுகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக் கின்றது. ஆனால் இன்னும் அதற்கான இடமும், நாளும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.