Header Ads



நன்றி மறக்காத இலங்கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து காப்பாற்றிய இந்தியாவுக்கு அவர் எந்த நன்றியையும் தெரிவிக்கவில்லை.

ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து - இலங்கைக்கு ஆதரவாக நின்ற பங்களாதேஸ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, மொரிட்டானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, ஆகிய நாடுகளுக்கும், நடுநிலை வகித்த அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினோ பாசோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல் ஆகிய நாடுகளுக்குமே வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இந்தியா கைவிட்ட பின்னர், தீர்மானத்தைத் தோற்கடித்து இலங்கைவைக் காப்பாற்றும் முயற்சியில் சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சி முக்கிய பங்கு வகித்ததாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் அணிசேரா நாடுகள் அமைப்புக்குத் தலைமை தாங்கும் எகிப்து வெளிவிவகார அமைச்சர், இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் இணைப்புச் செயலராக உள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கர் ஆகியோருக்கும், கியூபா, ரஸ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. "அமெரிக்காவின் தீர்மானத்தின் கடுமையைக் குறைத்துக் காப்பற்றிய இந்தியாவுக்கு அவர் எந்த நன்றியையும் தெரிவிக்கவில்லை."

    புரியவில்லை ஆசிரியரின் ஆதங்கம். ஒரு கோப்பை பாலில் ஊற்றவேண்டிய விஷத்தின் கடுமையைக் குறைத்துக் கொடுத்தாலும் கலக்கப்பட்டிருப்பது கொடிய விஷமே!.

    ReplyDelete
  2. இந்தியா எதிர்த்திருந்தால் தீர்மானம் தோற்றிருக்கும்.
    கனிமொழியை காப்பாற்றும் படி கலைஞர் சொன்னதைத்தான்
    செய்ய முடியவில்லை, இதையாவது செய்து கருணாநிதியை
    தாஜா பண்ணுவோம் என்று மன்மோகன் சிங்கும்,
    அலைவரிசை விடயத்தில் இழந்து போன குடும்ப மானத்தை சரிக் கட்ட
    கருணாநிதியும் போட்ட திட்டங்களின் விளைவுதான்.

    இந்தியா ஆடியது ஒரு ராஜதந்திர நாடகம்.
    விலாங்கு மீனுக்கு வாலையும், பாம்புக்கு
    தலையையும் காட்டுமாம்.

    இந்தியா அமெரிக்காவுக்கு தலையையும், தமிழ்நாட்டுக்கு
    வளையும் இலங்கைக்கு இதயத்தையும் காட்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.