Header Ads



பஷார் அல் அசாத்தின் மனைவி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை

பிரித்தானியாவை பிறப்பிடமாக கொண்ட சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் மனைவிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணத் தடை மற்றும் சொத்துக்கள் முடக்கம் போன்றன அஷ்மா அல் அசாத்திற்கு எதிராக விதிக்கப்படவுள்ளதாக இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.

பஷார் அல் அசாத் உள்ளிட்ட 12 சிரிய பிரஜைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. பிரித்தானியாவிற்கு அஷ்மா விஜயம் செய்வதற்கு தடைவிதிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் தெளிவாக தெரியவரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடகாலமாக அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை சிரிய அரசாங்கம் கொலை செய்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.