யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மையவாடியில் மலம் கழிக்கும் செயற்பாடுகள் (படம் இணைப்பு)
முஹம்மத் ஜான்ஸின்
யாழ் சின்னக்கடை கோட்டைப்பகுதியிலிருந்து 1560 இல் போர்த்துக்கீஸரால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்போதைய சோனகரிஸ்தானில் குடியேறியிருந்தனர். அதே போல் 1744இல் நல்லூரிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்களும் சோனகரிஸ்தானிலேயே குடியேறியிருந்தனர்.
இந்நிலையில் மையவாடித் தேவைக்காக தற்போது சினனப்பள்ளிவாசலுக்கு அண்மையிலுள்ள பிரதேசம் உபயோகப்படுத்தப்பட்டது. மையவாடி நிலம் தாழ்வான பிரதேசமாக காணப்பட்டதால் மழை காலங்களில் வெள்ளம் கபுறுகளின் மேல் தேங்கும் நிலை காணப்பட்டது. இதனால் 1900களில் சின்னக்குளமும் பெரியகுளமும் மேலும் ஆழமாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் மையவாடிப் பிரதேசத்தில் கொட்டப்பட்டு அப்பகுதி உயரமாக்கப்பட்டது.
1990 ஓக்டோபர் 30இலிருந்து முஸ்லிம்கள் அங்கு வாழாததால் முஸ்லிம் அல்லாதவர்கள் பெரியகுளத்தை குளிப்பதற்கு பாவித்து வந்தனர். தற்போது முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் மீளக்குடியேறிவரும் நிலையில் கூட அதிகமான முஸ்லிம் அல்லாதவர்கள் இக்குளத்தை பாவிப்பதை காணமுடிகிறது.
இந்நிலையில் குளிப்பதற்காக அங்கு வரும் மக்கள் மையவாடிகளின் மேல் தமது மலசலத்தை கழித்து அவற்றை அசுத்தப்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் அறியாமையாக இருக்கலாம். இருந்த போதிலும் மையவாடிக்கு நுழைவாயில்களை அமைப்பதன் மூலம் அப்பிரதேசத்துக்குள் மக்கள் அநாவசியமாக நுழைவதை தடுக்க முடியும்.
மேலும் இப்பிரதேசத்தில் எமது மூதாதையர்களே அடக்கப்பட்டுள்ளனர். மையவாடிகளின் மீது துப்புவது மலசலம் கழிப்பது தடைசெய்யப்பட்ட செயல்களாகும். இந்த செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களில் வசதியுள்ளவர்கள் சின்னப்பள்ளி நிர்வாகசபையை சந்தித்து கலந்துரையாடி சுற்றுமதில்களையும் நுழைவாயில்களையும் அமைக்க தமது பங்களிப்புகளையும் வழங்கி மையவாடி அசுத்தமாகும் நிலமைக்கு மிகவிரைவில் ஒரு முடிவு கட்டவேண்டும்.
சிலர் மையவாடிகளை அசுத்தமாக்குவதை கண்ட யாழ் சின்னப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ. சி. சனூன் பள்ளியின் நிர்வாகிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நிர்வாகிகள் குழு அதன் தலைவர் எம்.எஸ்.ஜினூஸ் தலைமையில் அண்மையில் அங்கு விஜயம் செய்து இப்பிரதேசத்தை; பார்வையிட்டனர்.
மேலும் கட்டிட நிர்மானக்குழு தலைவர் எம்.எம்.முஸாதீக்கையும் அவ்விடத்துக்கு அழைத்து நிலமை விளக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டுமானப்பணி முடிவடைந்ததும் நுழைவாயில்கள் அமைக்கும் வேலைகளைச் அவசரமாகச் செய்ய வேண்டுமென நிர்வாகிகளும் கட்டிட நிர்மானக்குழுவும் முடிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் எம்.எஸ். ஜினூஸ் அவர்களை 0777-3851353 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஈமெயில் செய்ய விரும்புவோர் jansin@hotmail.co.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பவும்.
இப்பணிக்கு உதவி செய்பவர்கள் இல்லையா. வெளிநாட்டில் உள்ள தாரிக் போன்றவர்கள் ஒரு தொகை பணத்தை வசூலித்து அனுப்பலாமே. யாழ்ப்பாண முஸ்லிம்களில் சிலரின் உள்ளங்கள் கல்லாகி விட்டது. நட்பனிகளுக்கு செலவழிக்காமல் அவட்றை செய்பவர்களை விமர்சித்து வருகின்றனர். இதனால் தன புலிகள் உங்களை விரட்டினார்கள் போலும்.
ReplyDeleteஅது சரி ஜான்சன் தங்களுடைய புத்தகத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வீரர்கள் தக்வா தாரிகள் ஒற்றுமையுடையவர்கள் என்றெல்லாம் கூறியுள்ளீர்களே. பள்ளி விடயத்தில் அடிபடுகிரர்களே. நியாயமும் உங்கள் ஊரார்க்கு விளங்க மாட்டேன்கிறது. செய்பவர்களையும் விடுகிறார்கள் இல்லை. என்ன ஊர் இது. இப்படித் தான் முன்பும் நீங்கள் வாழ்ன்தீர்களோ . நம்பமுடியவில்லை.
காத்தான்குடி ரியாஸ்.