Header Ads



கதிர்காமத்தில் மற்றுமொரு இரத்தினக்கல் வள பிரதேசம் - அமெரிக்க நிபுணர்கள் கண்டுபிடித்தனர்



கதிர்காமம், தம்மென்னாவ பகுதியில் இரத்தினக்கல் வளம் மிகுந்த மற்றுமொரு இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க நிபுணர்கள் 6 பேர் அடங்கிய குழு ஒன்றே இந்த இடத்தை அடையாளங் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக்குழு நேற்று வியாழக்கிழமை தினம் கதிர்காமம், தம்மென்னாவ பகுதியில் இரத்தினக்கல் வளம் மிகுந்த இடங்களை கண்டறிவதற்கான சேதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 

எனினும் நிலத்திற்கு கீழ் இன்னும் பல அடிகள் தமது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மேலும் சில மாதங்கள் எடுக்கும் எனவும் அக்குழு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.