Header Ads



அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகளை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்ப கான்க்ரீட் கவசங்களை தயாரிக்கிறது ஈரான்

ஈரானின் மீது ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகள் கச்சைக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவின் தாக்குதல்களில் இருந்து அணுசக்தி நிலையங்களை பாதுகாக்க ஈரானின் விஞ்ஞானிகள் நவீன தொழில்நுட்பத்தில் கான்க்ரீட் கவசங்களை தயாரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


ஈரானின் பூமிக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்க அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளின் வலிமையை அதிகரிக்க செய்வதாக செய்திகள் வெளியான சூழலில் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்மார்ட் கான்க்ரீட் என்று அழைக்கப்படும் கவசத்தை தயாரித்துள்ளதாக அக்ரவேட் ரிசர்ச் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை கூறுகிறது.

உலகிலேயே மிகவும் கடினமானதும், உறுதியானதுமான கட்டுமான கலவைகள் ஸ்மார்ட் கான்க்ரீட்டில் உபயோகிக்கப்படுகின்றன. ஆகையால் ஈரானின் அணுமின் நிலையங்களை தாக்குவது அமெரிக்காவிற்கு எளிதாக அமையாது என்று அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

ஈரானின் அணுமின் சக்தி திட்டங்களைப் போலவே ஸ்மார்ட் கான்க்ரீட்டுகளும் அமெரிக்காவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதுத்தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபிப்பதாக அக்கட்டுரை கூறுகிறது.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி வால்ஸ்ட்ரீட் ஜெர்னலுக்கு அளித்த பேட்டியில் பனேட்டா பங்கர் பஸ்டர் குண்டுகள் ஈரானின் பூமிக்கு அடியில் உள்ள அணுமின் நிலையங்களை தகர்க்க முடிவது குறித்து தனது சந்தேகத்தை வெளியிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.