Header Ads



வாகனங்களின் பெறுமதி திடீரென அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக மோட்டார் வாகன சந்தையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை மோட்டார் வாகன வர்த்தக சங்க தலைவர் திலக் குணசேகர வெளியிட்டுள்ளார்.

ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக சகலவிதமான மோட்டார் வாகனங்களும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மோட்டார் வாகனங்களுக்கான  கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மோட்டார் வாகன வர்த்தக சங்க தலைவர் திலக் குணசேகர தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.