இலங்கையின் தற்காலிக தூதரகம் ஈராக் ஹோட்டலொன்றில் நிறுவப்பட்டது
ஈராக்கில் இலங்கையின் தூதரகம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது. தூதரகத்தின் பதில் தூதுவராக டப்ளியூ.எம்.செனவிரத்ன கடமைகளை மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
தற்போது தூதரகம் ஈராக்கிலுள்ள ஹோட்டலொன்றில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை ஸ்திரமடைந்ததன் பின்னர் நிரந்தர இடமொன்றில் தூதரகத்தை அமைக்கவுள்ளதாக சரத் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையையும் இந்த அலுவலகத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென, வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment