இலங்கையை கைவிடாத முஸ்லிம் நாடுகள் - அமெரிக்காவின் அச்சுறுத்தலை நிராகரித்தன
ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இன்று வியாழக்கிழமை காலை இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதுஇ ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்த முஸ்லிம் நாடுகள்
பங்களாதேஸ்,
இந்தோனேசியா,
குவைத்,
மாலைதீவு,
கட்டார்,
சவூதி அரேபியா.
இந்தோனேசியா,
குவைத்,
மாலைதீவு,
கட்டார்,
சவூதி அரேபியா.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்த முஸ்லிம் நாடுகள்
ஜோர்தான்,
கிர்கிஸ்தான்,
மலேசியா.
கிர்கிஸ்தான்,
மலேசியா.
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்த முஸ்லிம் நாடுகள்
லிபியா,
நைஜீரியா.
நைஜீரியா.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற முஸ்லிம் நாடுகளை தனக்கு ஆதரவாக செயற்படுமாறு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தபோதும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இணங்காது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதாக இலங்கையிலிருந்து ஜெனீவா மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக குறிப்பிட்டனர்.
இதேவேளை ஜெனீவாவிலிருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்பு பிரதிநிதியாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, 20 ஆம் திகதி கட்டார் நாட்டுக்குச்சென்று அந்நாட்டின் அமீரை சந்தித்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள கட்டார் நாட்டு அமீர். தான் இலங்கைக்கு விஜயம் செய்ததை ஞாபகப்படுத்தியதுடன், இலங்கையையையும், இலங்கையர்களையும் தாம் நேசிப்பதாக கூறியுள்ளதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறமை வாய்ந்த தலைவரெனவும் புகழ்ந்துள்ளார். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல ஜனாதிபதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கட்டார் ஆதரவளிக்குமெனவும் இதன்போது அவர் அமைச்சர் றிசாத்திடம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
சிங்களவர் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் தமது எதிரிகளையும், துரோகிகளையும், பச்சோந்திகளையும்,
ReplyDeleteஉண்மையான நண்பர்களையும் தெரிந்துகொள்ள சிறந்த சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.