Header Ads



கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் - பெருமளவு முஸ்லிம்கள் ஒன்றுகூடினர் (படம்)

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பல இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சில குறிப்பிட்ட முஸ்லிம்கள் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.


முஸ்லிம் நாடுகளே அமெரிக்காவை ஆதரிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களே இலங்கைக்கு எதிராக வாக்களிக்காதீர்கள்' எமக்கொரு நீதி நட்பு நாடுகளுக்கு ஒரு நீதியா என்ற தொனியில் பதாதைகளை ஏந்தியவாறு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சிங்களவர்களும் இக்கண்டன பேரணியில் திரண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.