புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (படங்கள் இணைப்பு)
ஜனநாயக பொது ஊழியர் சங்கம் எனும் பெயரிலான புதிய தொழிற்சங்கமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபித்துள்ளது. இத்தொழிற்சங்கத்தின் ஆரம்ப நிகழ்வு நீதி அமைச்சில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பலர் தொழிற்சங்கத்தில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.
அமரபுர மஹாநிகாயாவை சேர்ந்த சம்புத்த சாஸநோதய மஹா சங்க சபாவின் அனுநாயக்கர் சாஸ்திரவேதி பண்டிதர் தொடம்வல தம்மரத்ன அனுநாயக்க தேரர், நாடராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.அப்துல் மஜீத், சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் எம்.எஹியா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இத்தொழிற்சங்கத்தின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளராக நீதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ், பொருளாராக நாடராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் மற்றும் தேசிய அமைப்பாளரும், நீதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் டி சில்வா ஆகியோர் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
"இந்நாட்டில் தொழிற்சங்கங்களின் ஆரம்பம் அரசியல் கட்சிகளின் ஊடாக இருக்கவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களே அரசியல் கட்சிகளாக பரிணாமம் பெற்றன. இதுவே யதார்த்தமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக ஜனநாயக பொது ஊழியர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கம் ஆரம்பித்து வைக்கப்படுவது கட்சியின் வளர்ச்சி பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பு முனையாகும்.
வேறு தொழிற்சங்கங்களில் இருந்த சிலரும் இன, மத, மொழி பேதங்களின்றி எமது தொழிற்சங்கத்தில் இணைய முன்வந்துள்ளனர். இந்நாட்டில் தொழிற்சங்கங்களின் ஆரம்பம் அரசியல் கட்சிகளின் ஊடாக இருக்கவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தான் அரசியல் கட்சிகளாக பரிணாமம் பெற்றன. இதுவே யதார்த்தமாகும்.

ஆனால், இப்பொழுது அது தலை கீழாக மாறிப்போய்விட்டது. அரசியல் கட்சிகளின் ஊடாக தொழிற்சங்கங்கள் தோற்றம் பெருவதை தான் இப்பொழுது நாங்கள் காண்கின்றோம். இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் சமூகத்தில் தோன்றியுள்ள ஒரு முக்கியமான மாற்றமாக இதனை நாம் கருதலாம்.
அரசியல் கட்சிகளின் வாயிலாகவே பாட்டாளி மக்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் தோற்றம் பெறுகின்றன என்ற நிலைமை இப்பொழுது எல்லோருக்கும் நன்கு தெரிந்து விட்டது. அது நன்மையானதா, தீமையானதா என நான் கூற முற்படவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு தோற்றப்பாடு நிலவும் காலகட்டத்தில் எங்கள் மத்தியில் இருந்தும் ஒரு தொழிற்சங்கம் தோற்றம் பெற வேண்டுமென்ற எண்ணம் எம்மையும் ஆட்கொண்டிருந்தது.
எமது மறைந்த ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் தூர நோக்குடனும், தூய போக்குடனும் இவ்வாறானதொரு தொழிற்சங்கத்தை நிறுவ வேண்டுமென விரும்பி தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியின் ஊடாக தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முன்வந்தார்.
ஆனால், அவரது மறைவின் பின்னர் அது பலவீனமடைந்து விட்டது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனை உயிர்ப்பிக்க சிலர் என்னை சுயநல நோக்கத்துடன் அணுகினர். அதற்கானதொரு சரியான முடிவை எங்களால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது" என்றார்.
Post a Comment