பாகிஸ்தான் தப்பியது - தேம்பித் தேம்பி அழுத பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள்
ஆசியக் கிண்ணத்திற்காக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பங்களாதேஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இரண்டு ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் பங்களாதேஸ் அணி பலம்வாய்ந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. சொந்தமண்ணில் நடைபெற்ற இந்தபோட்டியை காண்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான பங்காதேஸ் ரசிகர்கள் கூடியிருந்தனர். போட்டியை காண்பதற்காக அந்நாட்டு பிரதமர் சேஹ் ஹசீனாவும் வந்திருந்தார்.இன்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 237 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 2 ஓட்டங்களால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
இதன்மூலம் ஆசியக்கிண்ணத்தை இரண்டாவது முறையாக வெற்றிகொண்டது பாகிஸ்தான். தோல்வியை தாங்கமுடியாது பங்களாதேஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுவதையும் காணமுடிந்தது.
Post a Comment