இங்கிலாந்து குழந்தைகளின் கல்வி நிலை பற்றிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவியர்களில் ஐந்து பேரில் ஒரு மாணவ, மாணவியருக்கு நடைமுறை கல்வி அறிவு குறைந்து காணப்படுவதாக வேர்ல்டு லிட்டர்ஸி பவுண்டேசனின் தலைமை அதிகாரி ஆண்ட்ரியூ கே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த ஆய்வில், இங்கிலாந்தில் வசிக்கும் மக்களில் எட்டு மில்லியன் மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன் படுத்தப்படும் வார்த்தைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் சிரமப்படுவதாக கூறியுள்ளது. குறிப்பாக மருந்து பொருட்களின் பெயர்கள் மற்றும் செக் புத்தகத்தை நிரப்புவதில் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் நடைமுறை வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை படிப்பதற்கும் வாசிப்பதற்கும் சிரமப்படும் நாடுகளின் வரிசையி்ல் இத்தாலி 47 சதவீதத்துடன் முதலிடத்தையும், அயர்லாந்து 22.6 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், 21.8 சதவீதத்துடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்தையும், நான்காமிடத்தை 20 சதவீதத்துடன் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது வாசி்ப்புதன்மை அடிப்படையில் இங்கிலாந்து மாணவர்கள் ஏழாம் இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக எகானமிக் கோ-ஆபரேசன் டெவலப்மென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment