தமிழ்நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமணம் பந்தத்தை காப்பற்றவே இந்தியா மூத்த சகோதரியான இலங்கையை கைவிட்டது
இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா, இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்திற்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமணம் பந்தத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை தோற்கடித்த போது, இந்தியா இலங்கை பெரும் உதவிகளை செய்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மச்சான் சின்ன சண்டையை போட்டார். மூத்த அக்காளின் கணவர் தானே இந்த மச்சான். தமிழ் நாட்டு மச்சான் சிறிய சண்டையை போட்டார். இந்த முறை தம்பிக்கு உதவ முடியாது. அப்படி உதவினால் நான் விவாகரத்து செய்வேன் என மச்சான் கூறினார். அவர் வெறுமனே அப்படி கூறவில்லை. இதனால் விருப்பமின்றியேனும் திருமணத்தை காப்பற்ற அக்காவுக்கு நேர்ந்;ததுடன் தனது சின்னத்தம்பிக்கு எதிராக வாக்களித்தார்.
அமெரிக்காவின் சண்டித்தனத்திற்கு அஞ்சி, அக்கா, தனது சின்னத்தம்பிக்கு எதிராக வாக்களிக்கவில்லை. மூத்த அக்கா தனது திருமணத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கினார். இதனால் அடுத்த முறை அமெரிக்கா, சண்டித்தனம் செய்யும் போது, மூத்த அக்கா, தம்பியின் பக்கம் இருப்பார். தனது திருமண பந்தத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே, அக்கா இம்முறை தம்பியின் பக்கம் இருக்கவில்லை எனவும் அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.(
இது கேலிக்கூத்து. தமிழ் நாட்டிலுள்ளோர் இது வரை புலிகள் பற்றி அறிந்திருந்தது எதுவும் இல்லை. இனியும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற சாக்கடை அரசியலில் ஊறிப்போனவர்கள் இருக்கும் வரை எதையும் அறியப்போறதும் இல்லை. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகவும் தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே இலங்கை தமிழ் மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் போலவும் சித்தரித்து அரசியல் நடத்துகிறார்கள். என்ன கேவலமான அரசியல். இந்திய மண்ணில் காலம் காலமாக இந்திய ராணுவத்தால் கொடுமைகளை அனுபவித்து வரும் காஷ்மீர் மக்களுக்காக அநீதியாக மட்டுமே செயற்பட்டுவந்த இந்திய அரசாங்கம், இலங்கை மக்கள் மட்டும் அமைதியாக வாழ விட்டுவிடுமா?
ReplyDelete