துருக்கி பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு
துருக்கி பிரதமர் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. துருக்கி பிரதமர் அலுவலகம் கிஸிலய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் 30 மீட்டர் சுற்றளவிற்குள் குண்டு வெடித்தது. பிரதமர் ரஜப் தய்யித் எர்துகானின் அமைச்சரவை கூட்டம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழலாம் என்ற அச்சத்தில் அருகில் உள்ள உச்சநீதிமன்ற பார்க்கிங் பகுதியில் உள்ள வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியின் தலைமையகத்திற்கு அருகே நடந்த ரிமோட் குண்டுவெடிப்பில் 15 போலீஸ் அதிகாரிகள் உள்பட சிவிலியனுக்கும் காயம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.

Post a Comment