ஜெனீவாவிலிருந்து றிஸ்வி முப்தி, அகார் முஹம்மத் விடைபெற்றனர்
சுவிஸ் - ஜெனீவாக்கு வந்திருந்த அகில இலங்கை உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி, மற்றும் கலாநிதி அகார் முஹம்மத் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஜெனீவாவிலிருந்து விடைபெற்றுள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேணையை தோற்கடிப்பதற்காக அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் இருவரும் ஜெனீவா வந்திருந்தனர்.
இந்நிலையிலேயே நிஸ்வி முப்தியினதும், அகார் முஹம்மதினதும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் சவூதி அரேபியாவுக்கும் மற்றவர் லண்டனுக்கும் செல்லவிருப்பதாக ஜெனீவா வந்துள்ள அமைச்சரொருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் கடந்தவாரம் அமைச்சர் றிசாத் பதியுதீன் சகிதம் ஜெனீவா வந்து பல்வேறு அரபு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைக்கு ஆதரவு கோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தனர்.
அதேவேளை றிஸ்வி முப்தியும், அகார் முஹம்மதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு அதரவு தெரிவித்து ஜெனீவா வந்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment