Header Ads



சிரியாவில் பஸ்ஸாருல் ஆசாத் தாக்குப்பிடிப்பது எவ்வாறு..?

சிரியாவில் நடந்து வரும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் தனது பிடியை பஸ்ஸாருல் ஆசாத் தக்கவைத்துள்ளார் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் எதிர்ப்பாளர்களை சமாளிக்க ராணுவ தாக்குதலை அதிகப்படுத்த உள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து சில மூத்த அதிகாரிகள் பதவி விலக நினைத்துள்ளதாகவும் மற்றபடி ஆசாத்தின் உள்கட்டமைப்பு பலமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசாத்தின் நிர்வாகம் சிரியாவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி அடங்கியுள்ளதாக கருதுகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கலவரத்தை சமாளிக்க தங்களால் முடியும் என்றும் அதற்கு இன்னும் அதிக ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆசாத்தின் நிர்வாகம் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிரியா 3,30,000 ராணுவ வீரர்களையும், விமான எதிர்ப்பு தளங்களைக் கொண்ட நாடு என்பதால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது கடினம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இது போன்று பல காரணிகள் ஆசாத்தின் அரசை குலையாமல் பாதுகாக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.