வடக்கு முஸ்லிம்கள் தமது பூர்வீக காணிகளை இழக்கும் அபாயம் - பிரிட்டன் எம்.பி.க்களுக்கு ரவூப் ஹக்கீம் விளக்கம்
வடக்கு முஸ்லிம்கள் தமது பூர்வீக காணிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற பிரபுக்கள் சபை உறுப்பினரும், சர்வகட்சி இலங்கை சங்கத்தின் தலைவருமான நெஸ்பி பிரபுவை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம் பற்றி நெஸ்பி பிரபு கேட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கையில் நல்ல பல அம்சங்கள் அடங்கியிருப்பதாகவும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் எதுவும் இருக்கமாட்டாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கெனவே இனங்களுக்கிடையில் காணப்படும் விரிசல்கள் தீவிரவாத சிந்தனை உள்ளோரின் செயற்பாடுகளின் விளைவாக மேலும் அதிகரித்து துருவப்படுத்தலை மோசமான நிலைமைக்கு தள்ளிவிடக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் அமைச்சர் கவலை வெளியிட்டார்.
வடக்கிலிருந்து அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களின் தற்போதைய நிலைமைபற்றி நெஸ்பி பிரபு வினவிய பொழுது, அவர்களில் கணிசமான தொகையினர் யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று மீள்குடியேறி வருவதாகவும் அவர்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
"இடம்பெயர்ந்து மீள்குடியேறி வருவோரை பொறுத்தவரை அவர்களை நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்வோர் என்றும் குறுகிய கால இடப்பெயர்வுக்கு உள்ளானோர் என்றும் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வடபுலத்து முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாக 1990ஆம் ஆண்டிலிருந்தே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்னல்களுக்கும், வசதியீனங்களுக்கும் மத்தியில் அவல வாழ்வை அனுபவித்து வருகின்றனர்" என அமைச்சர் கவலை வெளியிட்டார்.

நீண்ட காலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து தங்களது சொந்த இடங்களில் சென்று மீளக்குடியேறி வருவோர் தங்களது பூர்வீக காணிகளை இழக்கும் அபாயம் நிலவுவதன் காரணமாக அத்தகையோருக்கு நீதி வழங்கும் விதத்தில் புதிய சட்டமொன்றை தாம் மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
Post a Comment