ஒற்றுமையே பலம் என்பதை உணருமா முஸ்லிம் கட்சிகள்
தினகரன் வாரமஞ்சரி (ஆசிரியர் தலையங்கம்)
முஸ்லிம் அரசியலில் இன்று பாரியதொரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெயர்குறிப்பிடத்தக்க அனைத்து முஸ்லிம் கட்சிகளுமே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. தமக்கிடையே எதிரும் புதிருமாகவிருந்த கட்சிகள், பிரிந்து சென்று பல கூறுகளாகச் செயற்பட்ட முஸ்லிம் கட்சிகள் யாவும் இன்று ஓரணியில் நின்று அரசாங்கத்திற்கு சகல வழி களிலும் பக்கபலமாக இருந்து வருகின்றன.
குறிப்பாக ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதனை இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் மக்களும், இதர முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களும் கூட்டாக எதிர்த்தனர். தமது தாய் நாட் டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுகையில் அவர்கள் துணிந்து செயற்பட்டமையா னது உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. இது ஒரு வரவேற்கத்தக்க, பாராட் டத்தக்க ஆரோக்கியமான விடயமாகும். இலங்கை தேசிய அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவும், பின்னராகவும் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. அதிலும் இவர்கள் சிங்களத் தலைமைகளைக் கொண்ட பெரும்பான்மையினக் கட்சித் தலைவர்களுடன் இணை ந்து தமது சமூகத்திற்காகவும், முழு நாட்டிற்காகவும் பாரிய பங்களிப்பைச் செய்துள் ளார்கள். இதனால் சிங்களத் தலைமைகளின் நன்மதிப்பிற்கும், விசுவாசத்திற்கும் இவர்கள் ஆளாகியிருந்தனர்.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் நலன்கருதி மர்ஹும் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அக்கட்சி அதன் சின்னமான மரம் போன்று பலமான ஆணிவேர் கொண்டு பல கிளைகாளகப் பரவி பெரு விருட்சமானது. முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின் னர் முஸ்லிம் அரசியல் இந்நாட்டில் இன்னும் வலுப்பெற்றது. தமது கன்னித் தேர் தலிலேயே பல ஆசனங்களைக் கைப்பற்றிய அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான உறுப்பினர்களை பிரதான சிங்களக் கட்சிகளுக்கு வழங்குவதில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதனா ல்தான் அன்றுமுதல் காங்கிரஸ் ஒரு பேரம் பேசும் கட்சியாக மாற்றம் பெற்றது.
காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களது திடீர் மறைவையடுத்து கட்சி ஆரம்பத்தில் இரண்டாகியது. நாளடைவில் உள்வீட்டுப்பூசல் வலுவடைந்து மூன்றாகியது. அதன்பின்னர் நான்காகியது. இன்று காங்கிரஸ் மரமாக நின்றாலும், கிளைகள் தனித்தனியாக ஆனால் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்தத னால் பலமுள்ள கிளைகளாக பிரிந்த நிலையிலும் பரிணமித்து நிற்கின்றன.
அங்கும் இங்குமாக இருந்து வந்தாலும் காலத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டும், தமது மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்தும் முஸ்லிம் காங் கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. இதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து தமது பூரண ஒத்து ழைப்பை வழங்கிவரும் அமைச்சர்கள் றிசாத் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தொடர்ச்சியாக அரசாங்க தரப்பிலிருந்தே வெற்றிகளைக் கண்டு வரு கின்றன.
இந்த அமைச்சர்கள் சார்ந்த இக்கட்சிகள் மீதும் மக்கள் பெரு நம்பிக்கை வைத்தே செயற்பட்டு வருகின்றனர். இன்று சகல முஸ்லிம்களும் அரசாங்கத்திற்கு நேரடியாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுடனும் இணைந்து இருப்பதால் இந்தக் கட்சிகள் மட்டும் ஏன் தமக்கிடையே மட்டும் வேறுபாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. குறிப்பாக அரசா ங்கக் கட்சியில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஒருசிலரைத் தவிர ஏனைய முஸ் லிம் அமைச்சர்கள் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களாகவும் அதிலிருந்து பிரி ந்து சென்ற அங்கத்தவர்களாகவுமே உள்ளனர்.
இவர்கள் அனைவரும் முன்னர் போன்று ஒன்று சேர்ந்து ஒரே கூட்டணியில் செய ற்பட்டு ஒரே கருத்தைக் கொண்டியங்க வேண்டும் என்பதே வாக்களித்த மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் மூலம் அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத் துவதுடன் தமது பலத்தையும் அதிகரிக்கலாம். இவர்கள் அனைவரும் முன்னர் ஒன்றாக ஒற்றுமையாக ஓரணியில் இருந்தவர்களே. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இன்று இவர்களைக் கூறுபோட்டுள்ளன. எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்விதத்திலும் அரசாங்கத்தை அமை க்க முடியாது. எனவே ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்கும், அதனுடன் இணையலாம் என நினைப்போருக்கு அது நிச்சயம் வெறும் பகற்கனவாகவே அமையும்.
மர்ஹும் அஷ்ரப் அவர்கள் நடந்துவந்த பாதையில் முஸ்லிம் மக்களும், அவர் களை வழிநடத்தும் அரசியல்வாதிகளும் பயணிக்க வேண்டுமாயின் எல்லோரும் தலைவராவதை விடுத்து திறமையுள்ள ஒருவரின் தலைமையில் அல்லது இணைத் தலைமை மூலமாக பிளவுபட்டிருக்கும் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும். தலைமைகள் பிரிந்து நிற்பதால் மக்கள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. இதனைத் தலைவர்கள் உணர வேண்டும்
Post a Comment