Header Ads



வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியுடன் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்


யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு  புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் ஏனைய இடங்களிலும் வசித்து வருவோர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேறும் பொழுது  எதிர்நக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின்  உயர்ஸ்தனிகராலயத்தில் இலங்கை வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜேஸவாக்கும் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது
  
2008 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் உள்ளக இடம்பெயர்ந்தோரின் குடும்ப எண்ணிக்கை 24,368 என்றும், தனி நபர்களின் எண்ணிக்கை 85, 241 என்றும் குறிப்பிட்ட அகதிகள் உயர்ஸ்தானிகர் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி 2008 ஏப்ரல் மாதத்தின் பின்னர் அத்தகையோரின் எண்ணிக்கை 16,316 குடும்பங்களாக குறைந்து விட்டதாகவும் தனி நபர்களின் எண்ணிக்கை 47, 604 ஆக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
  
ஜெனீவாவுக்கு மீண்டும் பயணமாகவுள்ள அமைச்சர் ஹக்கீம் அங்குள்ள தமது அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகளோடு கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைத் தாம் மேற்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தனிகராலயத்தில் இலங்கை வதிவிட பிரதிநிதி மைக்கல் ஜேஸவாக் உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.