Header Ads



தெஹிவளை கடற்கரையில ராட்சத திமிங்கலம் கரையொதுங்கியது (படங்கள் இணைப்பு)

தெஹிவளை கடற்பிரதேசத்தில் திமிங்கலமொன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இந்தத் திமிங்கலம் சுமார் 6 அடி நீளமானது என தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் நகர ஆணையாளர் கே.வி.வி.பீ.என்.முத்துகல தெரிவித்துள்ளார்.

திமிங்கலத்தின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகவும் சிதைந்து அழுகிய நிலையில் காணப்பட்ட திமிங்கலத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் கிளம்பி இருக்கின்றது.  பல நாட்கள் கடலில் அலைக்கழிந்த நிலையில் திமிங்கல கரை ஒதுங்கி உள்ளது. பார ஊர்திகளின் உதவியுடன் சடலத்தை அப்புறப்படுத்தும் வேலைகள் இடம்பெற்றன.




No comments

Powered by Blogger.