இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நெதலர்லாந்தில் வபாத்தானார்
கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட பௌதீகவியல் பேராசிரியர் ஏ.எல்.எம். அப்துல் கபூர் தனது 65ஆவது வயதில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலையில் காலமானார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் துறையில் பட்டம்பெற்ற இவர் இலங்கை புள்ளிவிபரவியல் நிறுவனத்தில் புள்ளிவிபரவியல் துறையில் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தைப் பெற்றுக்கொண்டதுன் இத்தாலியிலுள்ள கோட்பாட்டு பௌதீகவியலுக்கான சர்வதேச மையத்திலும் பிரான்சிலுள்ள தூய மற்றும் பிரயோக கணிதவியலுக்கான சர்வதேச மையத்திலும் உயர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் குறுகிய காலம் விரிவுரையாளாராக பணிபுரிந்த இவர் நெதர்லாந்து கிரோனிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக கடமையாற்றியதுடன் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக உலகின் பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பட்டயக்கணக்கு புள்ளிவிபரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளராக மற்றும் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார்.
மேலும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பாக நடைபெற்ற பல மகாநாடுகளிலும் கலந்துகொண்டுள்ளதோடு, இஸ்லாமிய வங்கி முறை தொடர்பில் ஆங்கில மொழியில் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் கபூர் தமிழ்மொழியிலும் சில நூல்களை எழுதியுள்ளார். நெதலர்லாந்தின் கிரோனிகன் தகவல் தொழில்நுட்ப போரத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ள பேராசிரியர் கபூரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை மாலையில் நெதலர்லாந்தின் கிரோனிகன் நகரில் இடம்பெறவுள்ளது.

Post a Comment