புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான போர்க் குற்றத்தை ஒப்புக்கொண்ட தமிழ் ஊடகம்
''கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்'' என்ற தலைப்பில் யாழ் முஸ்லிம் இணையம் கடந்த புதன்கிழமை முக்கிய பதிவொன்றை செய்திருந்தது. http://www.blogger.com/blogger.g?blogID=949029781622113645#editor/target=post;postID=7998199644830825169
இந்நிலையில் ''சனல் 4 வெளிப்படுத்த தவறிய தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள்'' என்ற தலைப்பில் தமிழ் சீ.என்.என். யாழ் முஸ்லிம் இணையத்தை மேற்கோள்காட்டி புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை பகிரங்கப்படுத்தியிருந்தது.
எம்மை பொருத்தமட்டில் புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான போர்க் குற்றத்தை தமிழ் ஊடகமொன்று ஒப்புக்கொண்டதாகவே நாம் நோக்குகிறோம். நாம் அறிந்தவரையில் தமிழ் ஊடகமொன்று இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்றத்தை பகிரங்கப்படுத்திய சந்தர்ப்பம் இதுவேயாகும் எனலாம்.
அந்த தமிழ் ஊடகச் செய்தியை பதிவிடுகிறோம்..!
''இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற போர்க் குற்றங்களுக்கு ஆதாரங்களான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றில் சிலவற்றை யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத்தளம் தொகுத்து பிரசுரித்து உள்ளது.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்க தவறிய போர்க் குற்றங்கள் ஏராளமானவற்றில் சில என்று சுட்டிக் காட்டியும் உள்ளது இத்தளம்.
சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற வீடியோ மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் இணையத்தளம் இவ்வாறு அதிரடியாக செயல்பட்டு உள்ளது''

தமிழர்களின் மனநிலையில் வரும் மாற்றம் வரவேற்கத் தக்கது.
ReplyDeleteயாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் பணிகள் பாராட்டத் தக்கவை.
well done jaffna muslim web. group have to publish the article in english and report to UNHRC. and all international media. like al jazeera etc.
ReplyDelete