Header Ads



'ஷியா'களை முஸ்லிம் அல்லாதவர் என கூறும் அல்-இ-சுன்னத் வல் ஜமாத் அமைப்புக்கு பாகிஸ்தானில் அரசு தடை

தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டி பாகிஸ்தானில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்(எ.எஸ்.டபிள்யூ.ஜெ) என்ற அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே தடைச் செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை பி.பி.சியின் உருது பதிப்பு வெளியிட்டுள்ளது.

ஷியா முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாதவர் என கூறும் எ.எஸ்.டபிள்யூ.ஜெ, மேற்கத்திய நாடுகள் மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்காவின் இருப்பிற்கும் எதிராக தீவிர நிலைப்பாட்டை கையாளுபவர்கள் ஆவர். மவ்லானா அஹ்மத் லூதியானாவி என்பவர்தாம் இதன் தலைவர் ஆவார். 40 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான திஃபாஇ பாகிஸ்தான் கவுன்சிலின்(டி.பி.சி) முக்கிய அமைப்பான எ.எஸ்.டபிள்யூ.ஜெ தடைச் செய்யப்பட்ட அமைப்பான ஸிவாஹே ஸஹாபாவின் புதிய அமைப்பாக கருதப்படுகிறது.

1 comment:

  1. சஹாபாக்களையும், நபி (ஸல் ) அவர்களின் மனைவியரையும் முஸ்லிம் அல்லாதவர்கள் எனக் கூறும்
    ஷீயாக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?

    காதியானிகளை காபிர்கள் என்று புத்தகம் எழுதிய மவ்லானா மவ்தூதிக்கு
    தூக்குத் தண்டனை விதித்தது அப்போதைய பாகிஸ்தான் அரசு, காதியாநிகளுக்கு
    முழுச் சுதந்திரத்தையும் கொடுத்தது.

    கேவலம்.

    ReplyDelete

Powered by Blogger.