இராணுவ அதிகாரியை இலக்குவைத்த தமிழர் பேரவை - வில்லியம் ஹேக் மீதும் நடவடிக்கை
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை பிரித்தானியாவில் வரவேற்கப்படாத நபராக அறிவிக்க தவறிய பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மீது உலக தமிழர் பேரவை சட்டநடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ராஜதந்திரி பிரசன்ன சில்வாவை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுத்த தவறியமைக்கு எதிராக தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மீது உலக தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரலை பிரசன்ன சில்வாவை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுத்தத் தவறியதால் வில்லியம் ஹேக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை பிரின்பேர்க், பெய்ர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் எனும் சட்ட நிறுவனத்திடம் உலக தமிழர் பேரவை ஒப்படைத்துள்ளது.
2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில் தமிழ் பொதுமக்களை திட்டமிட்ட ரீதியில் தாக்கியதில் சம்பந்தப்பட்டதாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது உலகத் தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் வசிக்கிறார். முள்ளிவாய்கால் வரை நடைபெற்ற இனப்படுகொலையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா ஈடுபட்டிருந்தார் என்பதற்கான ஆதாரங்களை உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல் தனக்கு கிடைத்ததை உலக தமிழர் பேரவைக்கு எழுதிய கடிதமொன்றில் மேற்படி சட்ட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தனி நபர்களின் இராஜதந்திர பாதுகாப்பை நீக்கும்படி வெளிநாட்டு அரசாங்கங்களை கோருவதற்கான அதிகாரத்தை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் கொண்டுள்ளது எனவும் இதன் மூலம் இந்நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ள நிலையிலும் ராஜதந்திர பாதுகாப்பை நீக்கி, அந்நபரை வாபஸ் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கம் மறுத்தால் குறித்த நபரையும் அவரின் குடும்பத்தையும் வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படத்த வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தினால் முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment