Header Ads



ஆப்பிள் தேவை கிடுகிடு உயர்வு

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் வெளி வரும் போதெல்லாம் முதல் நாளே கடைகளில் பெருங் கூட்டம் அலை மோதும். அன்றே வாங்கியாக வேண்டும் என்பது போல மக்கள் வெறியுடன் கடை முன் கூடி வாங்க முயற்சிப்பார்கள்.

ஆனால் தற்போதெல்லாம் ஆப்பிள் தன் இணையத்தளம் மூலமும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை மையங்களில் சென்று வாங்க முடியாமல் திரும்பும் ஏமாற்றத்தினைத் தவிர்க்க, மக்கள் இணையத்தளத்தில் புதிய ஐ-பேடிற்குப் பதிந்து வைத்துள்ளனர்.

ஆனால் பதிந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததற்கு மேலாக இருப்பதால், அவர்களுக்கு மார்ச் 16ம் திகதி அன்று வழங்க முடியாத நிலைக்கு ஆப்பிள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் இரண்டு ஐ-பேட் மட்டுமே ஆர்டர் செய்திட முடியும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

பதிந்தவர்கள் மார்ச் 19ம் திகதி வரை காத்திருக்க வேண்டியதிருக்கும் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. இதனால் விற்பனை மையங்களில் கூட்டம் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மையங்களில் கூட்டம் கூடுகிறது என்ற தகவல் உண்மையா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். சென்ற முறை ஜனவரி மாதத்தில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஐபோன் 4 எஸ் விற்பனை செய்திடும் ஆப்பிள் மையம், அறிவித்தபடி விற்பனையை மேற்கொள்ள முடியாது என அறிவித்த போது, கூடி இருந்தவர்கள் முட்டைகளையும், கற்களையும் கடை மீது எறிந்து சேதப்படுத்தினார்கள்.

2012ம் ஆண்டில் 7 கோடி புதிய ஐ-பேட் விற்பனை செய்யப்படும் என ஆய்வு மையங்கள் எதிர்பார்த்துள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 71% உயர வழி வகுக்கும்.

No comments

Powered by Blogger.