Header Ads



பிரான்ஸில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கான வேண்டுகோள்..! (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் தேசத்தில் வாழும் அன்பார்ந்த முஸ்லிம் உறவுகளே..!!

இலங்கையில் துயரங்களுடன் வாழ்ந்துவரும் மக்களுக்கு பிரான்ஸில் வசிக்கும் எமது முஸ்லிம் சொந்தங்கள் உதவிசெய்து வருவதை பலரும் அறிந்திருப்பார்கள்.

கல்வி உதவி, விதவைகளுக்கான உதவி, மத்ரஸாக்களுக்கான உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி, தண்ணீர் குழாய் உதவி, மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கான உதவி, அபிவிருத்தி திட்டங்கள், தொழில் உதவிகள் மற்றும் பல உதவிகள் என இந்த உதவிகளை பட்டியல்படுத்தலாம்.

இந்த உதவிகள் அனைத்தும் பிரான்ஸில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பிலேயே வழங்கப்படுகிறது. இருந்தபோதும் இங்கு உண்மையான நிலவரம் என்னவென்றால் பிரான்ஸில் வசிக்கும் இலங்கைச் சகோதரர்களில் ஒருதொகையினர்தான் எமக்கு மாதாந்தம் தொடராக நிதியுதவி செய்துவருகின்றனர்.

பிரான்ஸில் ஏராளமான இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் வசித்துவரும் நிலையில் ஒருகுறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே உதவிகளை வழங்கி வருகின்றமையானது கவலைதரும் விடயமேயாகும். சில சகோதரர்கள் தாங்கள் தனிப்பட்ட வகையில் இலங்கையிலுள்ள சகோதரர்களுக்கு உதவிகளை செய்துவருவதாக வாதிடுகின்றனர்.

பிரான்ஸில் வசிக்கும் எல்லா முஸ்லிம் சகோதரர்களும் ஒருவகையில் தமது தனிப்பட்ட உதவிகளை இலங்கையில் வசிக்கும் முஸ்லிம் உறவுகளுக்காக செய்துவருகின்றமை உண்மைதான். அதில் நாம் தலையீடு செய்ய விரும்பவில்லை. இருந்தபோதும் எமது வாதம் என்னவென்றால் இந்த உதவிகள் கூட்டுச்சோந்து வழங்கப்படும்போது அதனால் எற்படும் பயன்களும் அதிகம் என்பதாகும். எனவேதான் இந்த உதவிகள் கூட்டுச்சேந்து இலங்கையை சென்றடைய வேண்டுமென்பதற்கான உயர் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இலங்கையில் துன்பங்களை சுமந்து நிங்கும் எமது முஸ்லிம் உறவுகளை இலக்குவைத்து நாம் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாட்டிற்கு பிரான்ஸில் வசிக்கும் அத்தனை இலங்கை முஸ்லிம்களினதும் ஒருமித்த ஆதரவை நாம் இச்சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கிறோம்.

பிரான்ஸில் வசிக்கும் எமது இலங்கைச் சகோதரர்கள் மாதாந்தம் 10 யூரோக்களை வழங்குவதன் மூலம் இலங்கையில் துன்பத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் உறவுகளின் வாழ்வில் வசந்தம் ஏற்பட உதவலாமென்பது எமது நம்பிக்கை.

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் உறவுகளே...! மிகச் சிறிய தொகையான 10 யூரோக்களை மாதாந்தம் வழங்குவதன் மூலம் எமது இந்தச் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறோம். உங்கள் உதவிகள் இந்த இயக்கப் பாகுபாடும் அற்றநிலையில் உரியவர்களுக்கு, உரியவிதத்தில் சென்றடையுமென நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

உங்கள் உதவிகளை வழங்க வேண்டியவர்களின் பெயர் விபரங்கள்..!

தாரிக் 0666953008

ஜரீர் 0651189100

நவ்சாத் 06551966790

ரபீன் 060703818

அத்துடன் நீங்கள் எங்களிடம் வழங்கிய பணத்திற்கு ஆதாரங்களுடன் கணக்கு காண்பிக்கவும், உங்கள் சந்தேகங்களுக்கு பதில் தரவும், உங்களின் சிறந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் எப்போதும் தயாரென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதேவேளை பிரான்சில் வசிக்கும் இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் இதுகாலவரைக்கும் செய்த உதவிகள் மூலம், நாம் இலங்கையில் மேற்கொண்ட சில செயற்றிட்டங்களை இங்கு புகைப்பட ஆதரங்களுடன் பட்டியலிடுகிறோம். 


















2 comments:

  1. நன்னோக்கத்துடன் உதவிகள் செய்த சகோதரர்களுக்கு அல்லாஹ்
    மென்மேலும் பரகத் செய்வானாக. அவர்களுடைய விடயங்களை/ தேவைகளை அவர்களுக்கு இலகு படுத்திக் கொடுப்பானாக. அவர்களின் உழைப்புகளை ஹலாலானவயாக ஆக்கி, அவற்றை
    பாதுகாப்பானாக.

    புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிடும் பொழுது, உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நபர்களின் முகங்களை மறைத்து வெளியிடுவது
    அவர்களின் தனி மனித கவ்ரவத்தைப் பாதுகாக்கும்.

    ReplyDelete
  2. தாரிக் தாவூத்
    பரிஸ் பிரான்ஸ்

    மேலே கருத்து சொன்ன சகோதரர் அவர்களுக்கு...!

    உங்களுடைய ஆக்கபூர்வ கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் புகைப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கும் போது உதவிகள் பெறுபவர்களின் முகத்தை மறைக்க நடவடிக்கை மேற்கொள்வோம். எதிர்காலத்திலும் உங்களின் இதுபோன்ற சிறந்த ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

    நன்றி..!!

    ReplyDelete

Powered by Blogger.