ஒத்துழைப்பு தாருங்கள் - யாழ் சின்னப்பள்ளி வாசல் நிர்வாகசபை தலைவர் எம்.எஸ். ஜினூஸ்
சுக்ரி இனாஸ்
யாழ் சின்னப் பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. பள்ளிவாசல் கட்டுமானத்துக்கு சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டு அவற்றைப்பற்றி தீர விசாரிக்கும் நோக்குடன் அந்தப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடினேன். அவர்களில் சின்னப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.எஸ். ஜினூஸ் இது சம்பந்தமான சில வினாக்கள் கேட்கப்பட்ட போது அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
கேள்வி: சின்னப்பள்ளி கட்டும் பணி எவ்வாறுள்ளது?
ஜினூஸ்: தற்போது எட்டு அறைகள் மீளக்கட்டப்பட்டுள்ளன. பெயின்ட் வேலை மற்றும் மின்சார இனைப்பு வேலைகள் மட்டும் செய்ய வேண்டியுள்ளது. பள்ளிவாசல் கட்டமானத்துக்கான வரைபுகள் தயாரிக்கப்பட்டு தற்போது எமது கைக்கு கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ்; அடுத்த வாரம் பள்ளியின் பிரதான கட்டிடத் தொகுதி வேலைகள் தொடங்கும்.
கேள்வி: நீர்கொழும்பில் வசிக்கும் தாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலை கட்டுகின்றீர்கள்?
ஜினூஸ்: யாழ்ப்பாணத்தில் தான் நான் பிறந்தேன். அது எனது தாயகம். சின்னப்பள்ளி எனது மஹல்லா. சிறு வயது முதல் வெளியேற்றப்படும் கடைசி நாள் சுபுஹு தொழுகை வரை அங்கேயே தொழுது வந்தேன். எனது உடன் பிறந்த சகோதரன் அடக்கப்பட்டுள்ள இடம் சின்னப்பள்ளி மையவாடி. எனது மூதாதையரும் அங்கு தான் அடக்கப்பட்டுள்ளார்கள். எனது பெயரில் எனக்கு ஒரு காணி சின்னப்பள்ளி வட்டாரத்தில் உள்ளது. நான் தொழுது வணங்கிய பள்ளி இடிந்து கிடப்பதை எனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான் மஹல்லாவாசிகளை ஒன்று கூட்டி பள்ளிளை மீளமைக்கும் முடிவை எடுத்தோம். நான் எங்கு வாழ்ந்தாலும் சின்னப்பள்ளி தான் என்னை வளர்த்து மார்க்கத்தை ஊட்டிய பள்ளி. அந்த வகையில் தான் எனது முயற்சி தொடங்கியது.
கேள்வி: தாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறவில்லை?
ஜினூஸ்: நான் ஒரு கிராம அதிகாரி அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறேன். நினைத்தபடி எனக்கு இடம் மாற முடியாது. 2009இல் பாதை திறந்த காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் பெற முயற்சி செய்தேன். தற்போது தான் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் எனது தாயகப் பிரதேசம் சென்று எனது யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்துக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் என்னாலான முயற்சிகளை செய்வேன்.
கேள்வி: அங்கு ஏற்கனவே மீளக்குடியேறியிருப்போர் பள்ளியைக் கட்ட முன்வரவில்லையா?
ஜினூஸ்: அவர்களிம் பள்ளியைக் கட்டுவதற்கான வசதிகள் இல்லை. அவர்கள் சில நிறுவனங்களை அனுகியிருந்த போதிலும் அதற்கான உதவிகள் கிடைக்கவில்லை. அவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூறி சில நிறுவனங்கள் அவர்களை நிராகரித்து விட்டது.
கேள்வி: சின்னப்பள்ளி விடயத்தில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவுகின்றதே?
பதில்: நாம் பள்ளியை மீளக்கட்ட உருவாக்கிய சங்கத்தில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளோரையும் சேர்த்தே மீளக்கட்டுமான குழுவை உருவாக்கியிருந்தோம். இடையில் சிலர் அவர்களின் மனதை மாற்றி பள்ளியை தாமே நிர்வகிக்க முயற்சி செய்துள்ளார்கள். அவர்களின் மூளைச் சலவைக்கு இவர்களும் ஆளாகியுள்ளார்கள். அதனால் பள்ளி கட்டுப்படாவிட்டாலும் பரவாயில்லை அதளை தாமே ஆள வேண்டுமென்ற சிந்தனை சிலரிடம் வந்து விட்டது.
கேள்வி: சின்னப்பள்ளி நிர்வாக சபை முதலில் தொடங்கப்பட்டதா? அல்லது மீள் கட்டுமான குழு முதலில் தொடங்கப்பட்டதா?
பதில்: சின்னப்பள்ளி மீள் கட்டுமான குழு 2011 மே 29 அன்று உருவாக்கப்பட்டது. வக்பு சபையால் அங்கீகரிக்கப்படாத நிர்வாக சபை 2011 ஜுன் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தறபோது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சபை 2011 டிசம்பர் 18ஆம் திகதி நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்ட சபையாகும்.
கேள்வி: மீள்குடியேற்றக்குழுவில் யார் யார் உள்ளனர்.
இக்குழுவில் படித்தவர்கள் பணபலமுள்ளவர்கள் உள்ளார்கள். ஆசிரியர்கள், கணக்காளர்கள், பட்டதாரிகள், கட்டிடக்கலை நிபுணர்கள் பள்ளிவாசலுக்காக தமது பணத்தை அள்ளி வழங்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நான் எதிர் பார்த்ததை விட திறம்பட மீள் கட்டுமானத்தை திட்டமிட்டுள்ளார்கள். அதில் சிலர் இது ஒரு மீள்கட்டுமான முயற்சியாக மட்டுமல்லாமல் மீள்குடியேற்றத் திட்டத்தையும் மையமாக வைத்து செயற்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கையுடன் உள்ளனர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுப்பானாக!
கேள்வி: தற்போதுள்ள குழப்பங்கள் பற்றி
பதில்: பள்ளிவாசலுக்கு சொந்தமான அறை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒஸ்மானியா பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு அதில் ஒரு அறை வழங்கப்பட்டிருந்தது. அவரை பள்ளிவாசலின் பிரதான கட்டிடத்திலுள்ள அறைக்கு மாறி தற்போதுள்ள அறையை கட்டுவதற்க தருமாறு கேட்டோம். அதைத் தர அவர் மறுத்து விட்டார். பிறகு பள்ளியினுள் உள்ள அறையின் திறப்பை வாங்கி அங்கே சீமெந்து போன்ற பொருட்களை பாதுகாக்க எண்ணி திறப்பை வாங்கினோம்.
கேள்வி: பள்ளிகட்டுவதிலுள்ள பிரச்சினைகள் எவை?
ஜினூஸ்: அறைகள் கட்டப்பட்ட போது ஆசிரியர் இருந்த அறையையும் உடைத்து செப்பனிட வேண்டியிருந்தது. அவ்வறையின் கூறையமைப்பை மற்ற அறைகளின் அமைப்புக்கு ஏற்றவாறு உயர்த்தி மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு எமது செலவில் அறையொன்று எடுத்துத் தருகின்றோம் என்று கூறினோம். அதற்கு அவர் எங்களது நிர்வாக சபையை தான் ஏற்கவில்லை என்றும் அதனால் அறையிலிருந்து வெளியேற முடியாதென்றும் கூறிவிட்டார்.
கேள்வி: நீங்கள் யாழ் சென்று நேரடியாக பைசல் மௌலவியிடம் சென்று அவரை உடனடியாக வெளியேறும் படி கூறினீர்களாமே, உண்மையா..?
ஜினூஸ்: சிலர் இஸ்லாமிய வேடமிட்டுக் கொண்டு பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அறையை விட்டு பள்ளியினுள் உள்ள அறையில் தங்குமாறு ஒரு வாரத்துக்கு முன்பே நாங்கள் வேண்டியிருந்தோம். பைசல் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் தற்போதுள்ள அறையிலேயே தங்கவுள்ளதாக அடாத்தாக தெரிவித்தார். அதன் பிறகு தான் மற்ற அறையின் சாவியை வாங்கி அதனை இரவில் 10 பேருடன் சென்று மிரட்டிய சம்பவம் நடந்தது. இந்த விடயத்தைப் பற்றி கதைப்பதற்கும் மீள்கட்டுமானப் பணிகளை பார்வையிடவுமே நாங்கள் யாழ் சென்றோம்.
நாங்கள் யாழ் சென்றவுடன் முதலில் கட்டிட பணிகளைப் பார்வையிட்டோம். அப்போது பைசல் அறையில் இருக்கவில்லை. நிர்வாக சபை உபதலைவர் ஜாபிரை சந்தித்து அவரை யார் யார் மிரட்டியது என்ன நடந்தது போன்ற விடயங்களை விசாரித்தோம். எமது நிர்வாக சபையின் செயலாளர் எம்.ஏ.சி. சனூன் மூலமாகவே பைசலுடன் கதைக்க எண்ணினோம். இடையில் காரிஸ் என்பவர் பைசலுடன் கதைக்க என்னை அழைத்த போது ஜனாப். எம்.ஏ.சி. சனூன் வரும்வரை பைசலுடன் கதைக்க முடியாது என்று கூறிவிட்டேன்.
கேள்வி: நீங்கள் திடீரென எழும்பச் சொன்னது தவறு தானே..?
ஜினூஸ்: அறைகளை கட்டும் பணி ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பே அறை தேவை என்பதை நாம் தெரிவித்து விட்டோம். எங்களது மீள்கட்டுமானம் அமையப் போகும் விதத்தையும் விளக்கியிருந்தோம். அவ்வாறிருந்தும் அவர் ஒத்துழைக்கவில்லை. இருந்த போதும் எமது நிர்வாக சபை கட்டிட நிர்மாணக் குழுவை அனுகிய போது அவர்கள் பைசலுக்கு தேவையான அறையொன்றை ஒரு மாத காலத்துக்கு தமது செலவில் எடுத்துக் கொடுப்பதாக கூறினார்கள். இந்த விடயம் கூட்டத்தில் வைத்து பைசலுக்கு விளக்கப்பட்டது. அதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்ததுடன் உங்களை நான் நிர்வாக சபையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எழும்ப முடியாது என்று இறுமாப்புடன் கூறிவிட்டார்.
கேள்வி: நீங்கள் இவ்வளவு தூரத்துக்கு அப்பால் இருந்தும் பள்ளி அறை வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டீர்கள். அவ்வாறிருந்தும் நீர்கொழும்பிலிருந்து கொண்டு இங்கு என்னத்தை பிடுங்கப்போகிறீர்கள் என்று கேட்டார்களா?
ஜினூஸ்: அறைகளை கட்டப்படுவதை பார்த்த பிறகும் அவ்வாறு கேட்டது எமக்கு ஆச்சரியமாகப் படுகிறது. எமது சகோதரர்களை எமக்கெதிராக ஏவி விட்டு அதில் இலாபமடைய நினைக்கின்றனர் சிலர். அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் செய்த்தானின் காரியங்களை செய்யும் இவர்களை எமது சகோதரர்கள் மிக விரைவில் இனம் காண்பார்கள்.
கேள்வி: இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்..?
ஜினூஸ்: எங்களுக்கு நிரந்தரமாக 24 மணிநேரமும் பள்ளியில் தங்கக்கூடிய இமாம் ஒருவர் தேவை. மேலும் பள்ளிவாசலில் குர் ஆன் மத்ரஸா நடத்துதல் போன்ற வேலைகளையும் இமாம் செய்ய வேண்டி வரும். மேலும் எமது பள்ளியில் திக்ரு மஜ்லிஸ் கபுராளிகளுக்கான துஆ மஜ்லிஸ் என்பன ஒவ்வொரு வாரமும் இடம்பெறும். 1744களில் இருந்து முஸ்லிம்கள் அங்கு அடக்கப்பட்டுள்ளார்கள். சின்னப் பள்ளி வழமையின் படி எமது மூதாதையரான கபுராளிகளுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் திக்ரு மற்றும் குர்ஆன் ஓதி அவர்களுக்காக துஆ செய்யப்படும். இது யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளவர்களினதும் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் யாழ் முஸ்லிம்களினதும் விருப்பமும் வேண்டுகோளுமாகும். மேலும் இப்பள்ளி சமூகத்திடையே பிளவை ஏற்படுத்தாத சகல இயக்கங்களுக்கும் பொதுவான பள்ளியாக இருக்கும் என்பது தான் அதனுடைய யாப்பு. பள்ளிக்கு குழப்பங்களை ஏற்படுத்தாத பொதுவான ஒரு இமாமே தேவை. மேற்சொன்ன அமல்களைச் செய்யக் கூடிய கீழ்படிவுள்ள மௌலவியையே மஹல்லாவாசிகள் விரும்புகிறார்கள். பள்ளிவாசல் கட்டி முடிக்க இன்னும் ஒன்றரை மாதங்கள் செல்லும். அதன் பிறகு பள்ளிக்கு முழு நேர இமாமை நாங்கள் நியமிப்போம்.
நாங்கள் 250 மைல்களுக்கு அப்பாலிருந்து எமது நேரத்தையும் பணத்தையும் செலவழித்து யாழ் வந்து இந்தப்பள்ளியை கட்டுகின்றோம். பிரயாணம் கூட மிகவும் சிரமமானது. இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு யாழ் வரும் எங்களை யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டாலும் பரவாயில்லை எமக்கு எதிர்ப்புகளை தெரிவிக்காது இடையூறுகள் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.
பள்ளி கட்டுமானத்தில் நிறைய திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளது. அத்திவாரம் அமைத்தல் தூண்கள் அமைத்தல் கொன்கிறீட் ஸ்லப் போடுதல் மின்சார வேலைகள் என்று ஏராளமான வேலைகளை திட்டமிட வேண்டியுள்ளது. இந்நிலையில் எமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளில் எங்களை சிக்க வைத்து மேற்போந்த திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பது இப்றாகிம் நபியை (அலை) ஜம்ரதுல் அகபா, ஜம்ரதுல் ஊலா மற்றும் ஜம்ரதுல் உஸ்ஸா போன்ற இடங்களில் தடுத்து நிறுத்தியது ஞாபகம் வருகின்றது.
நாம் இன்ஷா அல்லாஹ் பள்ளியை எப்பாடுபட்டாவது கட்டிமுடிப்போம். பள்ளிவாசல்கள் இறைவனின் வீடுகள். அவற்றை கட்டுவதை குழப்புவது இனைவைத்தலில் கொண்டுபோய் விட்டுவிடும். தனியொருவரின் தூண்டுதலுக்கு யாரும் இறையாகிவிடாதீர்கள். தயவு செய்து ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. இடையூறு விளைவிக்காதிருக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.
தாரிக் தாவூத் - பிரான்ஸ் பரிஸ்
ReplyDeleteயாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து படிப்படியாக இஸ்லாத்திற்கு விரோதமான செயல்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எம்.எஸ்.ஜீனுஸ் அவர்களுடைய பேட்டியை படிக்கும் போது யாழ்ப்பாணத்தில் மீண்டும் பித்அத்துக்கள் வந்துகுவிந்துவிடும் போலிருக்கிறது. பள்ளிநிர்வாக சபையின் பதவியென்பது முக்கியத்துவமிக்கது. இப்பதவியில் இருப்பவர் முன்மாதிரியாக செயற்படவேண்டியவர். இவர்கள் இஸ்லாத்திற்கு விரேதமான செயற்படுகளை முன்னெடுக்க முடியாது.
யாழ் சின்னப்பள்ளிவாசல் தலைவராக செயற்படும் ஜீனுஸ் இஸ்லாம் கூறியுள்ளதன்படி செயற்படுவதே சிறந்தது. தனது தந்தையார் எதை யாழ்ப்பாணத்தில் செய்து காண்பித்தாரோ அதை மீண்டும் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதை ஏற்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ளவர்கள் இஸ்லாத்திற்கு விரோதமான ஜீனுஸின் செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும்..!!
2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
ReplyDeleteTharik Daoud ,Paris
Mr.Thariq,do not be stupid.I hope you can read and understand tamil well.In the interview by Jinoose,he has not talked about islam but the ongoing process of rebuilding the mosque and some answers for the general questions and doubts.You are the one who behave like a Mubassir(one who gives thabseer to quran),which we can understand in your comment.Don't try to penetrate your nose in to the mud and smell the bad friend.
ReplyDeleteஅஸ்ஸலாமுஅலைக்கும்
ReplyDeleteயாழ்ப்பாணத்தில் சின்னப்பள்ளி வாசல்மட்டுமல்ல எல்லாப்பள்ளிகலும் அல்லாவை மட்டும் வனங்கும் இடமாகஇருக்கவேண்டும்.நிர்வகிப்பவர்கள் கலாலாகச்சம்பாதிப்பவர்கலாகவும்,இஸ்லாம்கூரும்வாழ்க்கைமுறையைபின்பற்பவராகவும் இருக்கவேண்டம், இந்தஅடிப்படையில் யார்தகுதியானவகள் என்று முடிவெடுக்கவேண்டும்.வாப்பாநிர்வாகத்தில்இருந்தார் என்பதற்க்காக மக்கள்நிர்வகிக்கவேண்டும் என்பதில்லலை. ஒக்டோபர்1990ஆம்ஆண்டிற்க்கு முன்பள்ளிநிர்வாகங்கள்மட்டும்
அல்லஅணைத்துநடைமுறைகளிலும்இஸ்லாம்இல்லை.LTTEயால்வெளியேறியபின்பு ஒருசிலர்மட்டும் இஸ்லாமியமுறையில் தமது வாழ்வைமாற்றிவிட்டார்கள்.பலர் அதேபலையவழிகேட்டில்இருக்கின்றனர். மீண்டும் கபுருவனக்கமா?... ராதிபா?.........கொடிஏற்றமா?.....
ஆஷிக்(பரிஸ்)
எழுத்துப்பிழை:
ReplyDeleteஇஸ்லாம்கூறும் வாழ்க்கைமுறையை பின்பற்றுபவர்கலாக இருக்க வேண்டும்
அதே பழையவழிகேட்டில்..
எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கூறப்பட்டதை எடுங்கள்.நன்றி
ஆஷிக்(பரிஸ்)
ஜினூஸ், அல்லாஹ்வுக்காக நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வர வேண்டாம்.
ReplyDeleteசோனகதெரு ஏற்கனவே முஸ்லிம்களின் செறிவு குறைந்து காணப்படுகின்றது.
அந்நிய மத வணக்கஸ்தலங்கள் உருவாகாவிட்டாலும், வீடுகளின் முகப்புகளில்
மாவிலை தோரணங்களும், கடவுள் படங்களும்,கடவுள் முகங்களும் போதிய அளவு
உள்ளன.
இவ்வாறான இஸ்லாத்துடன் சம்மந்தமில்லாத விடயங்கள் போதிய அளவு இருக்கும் பொழுது,
படித்த ஒரு கிராம அதிகாரியான நீங்களும் மார்க்கத்துக்கு முரணான திக்ரு மஜ்லிஸ், ஞாயிற்றுக் கிழமை
துஆ என்று இஸ்லாம் விரோத செயல்களை அதிகரிக்கத் துடிப்பது ஏன்?
உங்களுக்கு இஸ்லாத்தை பின்பற்ற ஆசை என்றால், முதலில் அதனைப் படியுங்கள், அதன் பிறகு
பொது வாழ்வில் செயல்படுத்த முயலுங்கள்.
1744 களில் இருந்து என்ன செய்தார்கள் என்பதல்ல விடயம், 1400 வருடங்களுக்கு முன்னர்
அல்லாஹ்வின் தூதர் எதனைக் காட்டிச் சென்றார்கள் என்பதே விடயமாகும்.
1744 ஐப் பற்றிப் பேசும் நீங்கள், 1500 களுக்கு முன்னர் உங்கள் மூதாதையர் இந்துக்களாக
இருந்திருந்தால், நீங்கள் அதனையும் சரி கண்டு பின்பற்ற வேண்டும் என்று சொல்லப் போகின்றீர்களா?
கடந்த காலங்களில் எதனை செய்தோம் என்பதல்ல விடயம், தூய்மையான இஸ்லாமிய அடிப்படையான
குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் எத்தனைப் பின்பற்ற வேண்டும் என்பதே விடயமாகும்.
அக்ரம்
ஜனாப் ஜினூஸ் அவர்களே,
ReplyDeleteஇப்ராஹீம் நபியின் சம்பவம் பற்றி நீங்கள் பேசுவது முரண்பாடாக உள்ளது.
நபியவர்கள் கடுமையாக எச்சரித்த நூதனங்களை பள்ளியில் செயல் படுத்தத்
துடிக்கும் நீங்கள் அல்லவா செய்த்தானுக்கு மகிழ்ச்சி கொடுக்கின்றீர்கள்?
உங்களுக்கு நிதி சேகரிக்கவும், கட்டடம் கட்டவும் தெரிந்தால் கட்டிவிட்டுப் போங்கள்.
உங்களுக்கு மார்க்கம் தெரியாது, மௌட்டீக அனுஸ்டானங்கள் தான்
தெரியும் என்பதனை உங்கள் பதில் நன்றாக படம் பிடித்துக் காட்டிவிட்டது.
இந்த 22 வருஷ அகதி வாழ்க்கையிலும் இன்னுமுமா நீங்கள் திருந்தவில்லை?
அளவுக்கு மீறி அக்கிரமங்கள் செய்து யாழ் முஸ்லீம்கள் மீண்டுமொரு முறை
விரட்டப்படும் நிலைக்கு அல்லாஹ்வின் கோபத்தை தேடிக் கொடுக்காதீர்கள்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை அழகிய முறையில், நபிகளாரின் திருநகராம்
மதீனாவில் படித்த அஷெய்க் பைசல் மதனி அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு
கொடுத்து மார்க்க விடயங்கள் நபிவழியில் நடக்க உதவியாவது செய்யுங்கள்.
அதுவும் முடியாவிட்டால். உங்கள் ஆதரவாளர்களுடன் அஜ்மீருக்கோ, நாகூருக்கோ,
காசிக்கோ, எர்வாடிக்கோ வேறு எங்காவது பொய் விடுங்கள்.
யாழ்ப்பாணத்தை குழப்பாதீர்கள், வழி கெடுக்காதீர்கள்.
உங்களுக்காக துஆ செய்கின்றோம்.
Dear G.S. Mr.Jinoos,
ReplyDeleteI have heard about you 1st time in 1988 during the IPKF period.
I thought you were educated and well mannered person with good character and true Islamic values.
My idea about you is changed upside down after my last visit to Jaffna. People from Moorstreet do not like you,your behaviour and your close associates, a graduate and another person, a butcher.
They told me a lot about your anti islamic activities.
They also told how you brought fithnah and problems to the community and a certain musjid along with your gang.
It is a shame to write more about this.
Please stop your thug type anti islamic behaviour in Jaffna for the sake of Allah.
Most of the Jaffna muslims, who are presently living in Moor street do not like you and your behaviour, but they keep quit because of the butcher.
Please change your behaviour and try to learn true Islam other than planning to polluting the masjids with paganist rituals.
Fear Allah.
யாழ் சோனக அன்பர்களான ஜினூஸ், ஜான்சின் மற்றும் சனூன் ஆகிய சகோதரர்களே,
ReplyDeleteஅல்லாஹ்வுக்காக உங்கள் நடத்தைகளை சீரமைத்துக் கொள்ளுங்கள். பண்பாக சமூகத்தில் நடந்துகொள்ளுங்கள்.
உங்களுடன் தொடர்பில் உள்ள நளீர் ராசிக் என்பவற்றின் மார்க்க விரோத, இணைவைப்பு செயல்களுக்கும்,
அவற்றை அவர் சமூகத்தில் அரங்கேற்ற எடுக்கும் முயற்ச்சிகளுக்கும் துணை போகாதீர்கள்.
அவருக்கு அறிவுரை வழங்குங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுவோமாக, நாம் அனைவரும்
மெளத்தாகக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
மக்களுடனும், ஆசிரியர்களுடனும், உலமாக்களுடனும், பெரியவர்களுடனும்,மாணவர்களுடனும்
அன்புடனும், பண்பாடாகவும், மரியாதையாகவும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். சண்டித்தனம் பண்ணாதீர்கள்.
நமது யாழ்ப்பாண சோனகதெரு சமூகம் இலங்கையிலேயே மிகவும் பாதிக்கப்பட்டு, முகவரியிழந்து போயிருந்த
ஒரு சமூகம். இந்த சமூகத்தை சரியான முறையில், அல்லாஹ்வின் கட்டளைப்படியும், அவன் தூதரின் வழிமுறைப்படியும் கட்டியெழுப்ப
ஒத்துழைப்பை வழங்குங்கள். முன்பைவிடவும் அதிகமான அந்நிய மதத்தவர்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ள நாம்
கலப்படமற்ற தூய இஸ்லாமிய வழிமுறைகளையும், சிறந்த மனிதப் பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
மக்களால் வெறுக்கப்படும் படியாக உங்கள் நடத்தைகள் அமையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பழம் பெருமைகளையும், அப்பா, வாப்பா பெயரைக் கூறி ஆதிக்கம் செய்யவும் முயலாதீர்கள்.
புலிகள் விரட்டிய பொழுது இவை எவையும் முன்னுக்கு வரவில்லையே! ஆகவே இன்றைய யதார்த்த
நிலையிலிருந்து சொனகதேருவைப் பாருங்கள். பல புதிய தலைமுறை
இளைஞர்கள் சொனகதேருவில் இன்று நிறையவே காணப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும்
முன்மாதிரியாக நீங்கள் உட்பட, நாம் அனைவரும் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நண்பன் இன்னொரு நண்பனைப் பார்த்து ''டேய்'' என்று சொல்லாத, ஒரு தந்தை தனது மகனைப் பார்த்து
''நீ'' என்று அழைக்காத எத்தனையோ முஸ்லிம் சமூகங்களை வடக்கிற்கு வெளியே பார்த்துவிட்டேன். அந்த சமூகங்கள் எல்லாம்
நமது சொனகதேருவைப் போல வரலாற்றுப் பெருமை ஒண்ட ஊர்கள் இல்லை.
ஆனால் பெரியவர்கள் காட்டிய முன்மாதிரி, சிறியவர்களும், இளைஞர்களும் மிகவும் பண்பாக, இரக்கமாக நடந்துகொள்கின்றார்கள்.
சமவயது எதிரியாக இருந்தாலும், ''அவர்'' என்றுதான் விழிக்கின்றார்கள்.
குடும்பத்துக்கு குடும்பம் பட்டப் பெயர் கொண்டு அழைக்கும் ஜாஹிலிய குறைசி வழிமுறையை கைவிடுவோம்.
சொனகதேருவை மாற்றியமைப்போம். 1990 க்கு முன்னர் நாம் நண்பர்களை ''டேய்'' என்று அழைத்தோம் என்பதற்காக அதைய தொடர்வதும்,
இளைய தலைமுறையினரை அவ்வாறே பயிற்ருவிப்பதும் ஆரோக்கியமானதல்ல.
நீங்கள் சிலரை எதிர்க்கின்றோம், அல்லது குறித்த ஒரு இயக்கத்தை எதிர்க்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு, நம் உயிரிலும் மேலான
நபி (ஸல்) அவர்களின் சரியான வழிமுறைகளையல்லவா எதிர்க்கத் துணிந்து விட்டீர்கள்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நீங்கள் யாரையாவது ஏசி, புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.
அழகியதொரு சொனகதேருவை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
இது சட்டத்தரணி ரமீஸ் அவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் கூடவே.
மேலும் மூத்த சகோதரர் முபீன் அவர்களுக்கும், மெளலவிகள் அஸ்மி, பைசர்
மற்றும் சோனக சமூகத்தின் அனைவரினதும் கவனத்துக்கும் சிந்தனைக்கும்.
(To jaffnamuslim.com editor,
you are allowed to edit and publish)
ASSALAMU ALAIKKUM WARAHMATHULLAHI WABARAKATHUHU,
ReplyDeleteDEAR MOOR STREER MUSLIMS
PLEASE FOLLOW QURAN & HADEES
DON'T MAKE SOME FOOLISH WORK