அல்காயிதாவுக்கு பின் ஆபத்தான அமைப்பு லஷ்கர் இ தொய்பா - அடியோடு அழிக்க வேண்டுமென்கிறது அமெரிக்கா
அல்காயிதாவுக்கு பின் அதிக ஆபத்தான அமைப்பாக லஷ்கர் இ தொய்பா உள்ளதால் அது அடியோடு பாகிஸ்தானின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ அழிக்கப்பட்ட வேண்டும் என்று அமெரிக்க நிபுணர் அமெரிக்க அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்.
தெற்காசியாவுக்கான அமெரிக்க குழுவின் சர்வதேச பாதுகாப்பு சிறப்பு ஆலோசகரான ஆஷ்லே டெல்லீஸ் அளித்துள்ள அறிக்கையில் காஷ்மீரும் இந்தியாவும் மட்டுமே லஷ்கரின் தாக்குதல் தளங்களாக இருந்தாலும் அது எப்போது வேண்டுமானாலும் விரிவடையும் சாத்தியம் இருப்பதால் இனியும் அமெரிக்கா மெளனமாக இருக்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தாக்குதல் ஒன்று போதும் லஷ்கரின் பலத்தை புரிந்து கொள்ள என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆஷ்லே அமெரிக்க மண்ணிலும் லஷ்கர் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் உதவி கிடைத்தால் நல்லது என்றும் கிடைக்காவிட்டாலும் அமெரிக்கா தனியே அழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
1987லில் பாகிஸ்தானின் ஆசியோடு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு பெரும்பாலும் அந்நாட்டின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இயங்கும் என்றாலும் லஷ்கர் இ தொய்பாவின் இலக்கு அதையும் தாண்டியது என்றும் குறிப்பிட்டுள்ள ஆஷ்லே தீவிர பிரசாரம், ஜிஹாதை குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டம் முழுவதும் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரும் அதன் இலக்கு நிச்சயம் நாம் கவலைப்பட கூடிய ஒன்றாகும் என்றும் அரசுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் ஆஷ்லே கூறியுள்ளார்.
அதற்கடுத்த ஆபத்து பலஸ்தீன விடுதலை இயக்கங்கள், அதற்கடுத்தது அல்ஜஸீரா, அதற்கடுத்தது முஸ்லீம் லீக் , அதற்கடுத்தது உலகிலுள்ள முஸ்லிம்களின் பொது அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் என்று அவா்களுக்கு வேண்டாதவா்களது பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதற்கு முன்னா் அவா்களுக்கு நாம் ஆப்பு வைக்க வேண்டும்.
ReplyDelete