இலங்கையில் முதன்முறையாக கருவிழி கூம்பல் நோய்க்கு சிகிச்சைகள் ஆரம்பம்
இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கெரட்டகோனர்ஸ் எனப்படும் கருவிழி கூம்பல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் முதல் முறையாக தேசிய கண் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருவிழி கூம்பல் நோய் ஆசிய வலயத்தில் இலங்கை உட்பட பல நாடுகளில் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சை மூலம் நோயை படிப்படியாக குறைக்க சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
நோய் பரவ ஆரம்பிக்கும்போதும் ஆரம்பித்து நடுநிலையில் இருக்கும் போதும் சிகிச்சைப் பெற்றால் அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய இயந்திரம் இலங்கையில் இதற்கு முன்னர் இருக்கவில்லை என்ற போதும் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறித்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது
இந்த நோயின் பெயரை ஆங்கிலத்தில் தரமுடியுமா?
ReplyDeleteI mean, the english spelling, please
Editor, pls give the proper english term for this.
ReplyDelete