Header Ads



ஈரானின் தீர்மானத்தை வரவேற்கிறது இஸ்ரேல் - ராணுவ நடவடிக்கையை பரிசீலிக்கவும் தயார் என்கிறது


ஈரான் தனது அணுசோதனை குறித்து , வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருப்பதற்கு இஸ்ரேல் வரவேற்றுள்ளது. ஈரான் அணு சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக , அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவித்தன.பொருளாதார தடையும் விதித்தது. தற்போது ஈரான், ஐ.நா.வின் 6 வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் இறங்கி வந்துள்ளது. 

இந்நிலையில், ஈரானின் பரம எதிரி நாடான இஸ்ரேல், ஈரானின் முடிவினை வரவேற்றுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகூவின் பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமிடோரர் கூறுகையில், 

ஈரானின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவ நடவடிக்கையினை தவிர்க்க , ‌ ஈரான் அணு சோதனையை கைவிடவேண்டும். ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை இஸ்ரேல் இன்னும் நம்புகிறது. ஈரானை தடுத்து நிறுத்த ராணுவ நடவடிக்கை குறித்து பரிசீலிக்கத்தான் வேண்டும் என்றார். இருந்தாலும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண , இன்னும் கால அவகாசம் உண்டு என ஒபாமா கூறியதை மேற்கோள்காட்டினார்.

No comments

Powered by Blogger.