இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் தங்கியுள்ளனவாம் - அமெரிக்காவே கூறுகிறது
இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படை அணிகள் தற்போது நிலை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் றொபேட் வில்லாட் தகவல் வெளியிட்டுள்ளார்.
தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் அடிப்படையிலேயே தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் அமெரிக்க சிறப்புப் படை அணிகள் நிலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பசுபிக் கட்டளைப்பீடமே இந்த சிறப்புப் படைகளை இந்த நாடுகளில் நிறுத்தியுள்ளது.
நோபாளம், பங்களாதேஸ், மாலைதீவு இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகளிலேயே அமெரிக்க சிறப்புப் படைகள் நிலை கொண்டுள்ளன. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் பேசும் போதே பசுபிக் கட்டளைத் தளபதி இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காகவுக்கு தெற்காசியா மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர் கூறியுள்ளார். எனினும் இலங்கையில் அமெரிக்க சிறப்புப் படைகள் எங்கு நிலை கொண்டுள்ளன என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. இலங்கை அரசும் இந்தத் தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment